ஸ்ரீதேவியை சுற்றிய ரூ.8 கோடி.. தங்கை ஸ்ரீலதா கடைசிவரை வரலயே.. ரூ. 250 கோடி ஆயுள் காப்பீடு தொகை நிஜமா
சென்னை: நடிகை ஸ்ரீதேவி 2018ல் துபாயில் உயிரிழந்தார். அவருடைய தங்கை ஸ்ரீலதாவும் நடிகை ஆக முயன்றாலும் முடியாமல், 1972-1993 வரை ஸ்ரீதேவியின் மேனேஜராக இருந்தார். தாயாரின் மரணத்திற்கு பிறகு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீலதா எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை, ஆனால், ஸ்ரீதேவியின் இறப்பிற்கும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா "விருதுநகரில் பிறந்த தமிழ் பெண்.. பாலிவுட்டில் நுழைந்து, அங்கேயே செட்டில் ஆனார்.. தமிழில் காட்டாத கிளாமரை ஹிந்தியில் காட்டவும், மார்க்கெட் உச்சத்துக்கு எகிறியது.. படங்களும் ஹிட்டாயின. ஸ்ரீதேவியின் ஸ்டேட்டஸும் பணம், புகழ் காரணமாக உயர்ந்துவிட்டது.

ரூ.250 கோடி ஆயுள் காப்பீடு
பிறகுதான் ஏற்கனவே திருமணமான போனி கபூரை திருமணம் செய்தார்.. 2 பிள்ளைகளும் பிறந்தார்கள்.. சொந்த படம் எடுக்கிறார் கணவர் போனி கபூர். ஆனால், அவரது படங்கள் தோல்வியடைந்ததால், அவருக்கு கடன் ஏற்பட்டது,.. இந்த கடனை அவரால் அடைக்கவே முடியவில்லை.. இதற்கு பிறகு ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டார்.. ஆனால், அந்த மரணம் பல சர்ச்சைகளை தந்தது..
அதாவது ஸ்ரீதேவி ஏமன் நாட்டில் ரூ.250 கோடிக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்தார்.. பொதுவாக, அரபு நாடுகளில் ஒருவர் இறந்துவிட்டால் மட்டுமே அந்த காப்பீட்டுத் தொகையை பெற முடியும் என்ற விதி உள்ளது.. அந்த காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக இந்த மரணம் நடந்திருக்கலாம் என்றும் ஊடகங்களில் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
8 கோடி பணம் எங்கே
அதாவது ஸ்ரீதேவியின் மரணம் "இயற்கையான மரணம் இல்லை" என்று மட்டும் போனி கபூர் சொன்னாரே தவிர, அது எப்படிப்பட்ட மரணம் என்பதை சொல்லவில்லை.
அதேபோல ஸ்ரீதேவி இறந்தபோது அவரது தங்கை ஸ்ரீலதா, இறப்புக்கு வரவில்லை என்ற சலசலப்பும் அப்போது கிளம்பியது.. இதற்கும் காரணம் பணப் பிரச்சனைதான்..
ஒருமுறை ஸ்ரீதேவியின் அம்மா நியூயார்க்கில் தவறான சிகிச்சையால் கண்பார்வை மற்றும் நினைவாற்றலை இழந்துவிட்டார்.. இதற்காக போடப்பட்ட வழக்கில், இழப்பீடாக 7.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.. இந்த பணத்தை ஸ்ரீதேவி மட்டுமே எடுத்துக் கொண்டாராம்..
ஸ்ரீலதா கடைசிவரை வரலயே
அம்மாவுக்கு வர வேண்டிய பணத்தை தனக்கும் பிரித்து தராததால், ஸ்ரீதேவி மட்டுமே வைத்து கொண்டதால், அந்த வருத்தம் ஸ்ரீலதாவுக்கு இருந்ததாம்.. சொத்து பிரச்சனை, பணப்பிரச்சனை இப்படியெல்லாம் ஏற்கனவே இருந்ததால்தான் ஸ்ரீலதா இறுதிச்சடங்கிற்கு வரவில்லை என்றார்கள்..
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்திற்கு உலகமே திரண்டு வந்தபோது, ஸ்ரீலதா வராததை குறித்து யாருமே கவலைப்படவில்லையே.. யாரும் கண்ணை கசக்கவும் செய்யலியே.. அதுக்காக ஸ்ரீதேவியின் மரணத்தில் ஸ்ரீலதாவுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று
நினைப்பது அபத்தமானது.. அப்படியெல்லாம் எதுவுமில்லை.
போனியாகாத போனி கபூர் படங்கள்
ஆனால் ஸ்ரீதேவிக்கு எப்படி கடன் வந்திருக்கும்? அழகையும் நடிப்பையும் கொட்டி நடிக்கக்கூடியவர். அப்படியிருக்கும்போது அவருக்கு ஏன் கடன் வரப்போகிறது.. போனி கபூர் படங்கள் போனியாகவில்லை.. அந்த கடனை அடைக்க, ஸ்ரீதேவி தன் உழைப்பையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டிய சூழல் வருகிறதா? இல்லையா?,
உண்மையிலேயே ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.. எனினும் இதுபோன்றவர்களிடமிருந்து அடுத்து வரும் தலைமுறையினர் எப்படி வாழ வேண்டும் என்பதை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.. சிறுகக் கட்டி பெருக வாழ் என்ற கூற்றுடன் நாம் வாழ வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications