விஜய்க்கு நல்லவர் யாருன்னு தெரியல! மாரி செல்வராஜ் படங்களில் இருக்கும் சாதி! சரத்குமார் ஆதங்கம்
சென்னை: நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'கொம்பு சீவி' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த இரண்டு பேட்டிகள் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு பக்கம் சினிமா குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளதெனில், மறுபக்கம் 2026 தேர்தல் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள கொம்பு சீவி படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த பேட்டியில், சமகால இயக்குனர்களான பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் குறித்து சரத்குமார் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

மாரி செல்வராஜ் மற்றும் ரஞ்சித் இருவருடைய படங்களிலும் ஜாதி கதை அதிகமாக இருக்கிறது என்று வரும் விமர்சனங்களுக்கு சரத்குமார், "இவர்கள் சாதி அரசியல் பேசுறாங்கன்னு சிலர் சொல்றாங்க. ஆனா ஹாலிவுட்டில யூதர்கள், கருப்பின மக்கள் தங்களோட வலியை தொடர்ந்து படங்களாக சொல்லிட்டு தான் இருக்காங்க.
அதே மாதிரி தான் இங்கயும். அவங்க வலியை வெளிப்படுத்துறாங்க. அதை கேலி பண்ணக்கூடாது. படத்தை படமா பாருங்க" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "மாரி செல்வராஜ் எடுத்த எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கேன். நான் பார்த்த இயக்குனர்களில் அவர் மிகச் சிறந்தவர்" என்றும் சரத்குமார் பாராட்டியுள்ளார்.
அதே பேட்டியில் தனது வயது குறித்து பெருமையுடன் பேசிய சரத்குமார், "வயசு ஒரு எண்ணிக்கை தான். என்னை பார்க்கும் பலரும் இவருக்கு எத்தனை வயது என்று தான் கேட்கிறார்கள். எனக்கு 71 வயது ஆகிறது. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதை ஃபோனில் கூகுளில் செக் பண்ணி பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த வயதிலும் நான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் புகைப்பிடிப்பது கிடையாது, மது குடிக்க மாட்டேன். அதோடு என்னுடைய உடலை பேணி பாதுகாத்து வருகிறேன். ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் அவசியம். அது எனக்கு மட்டுமல்ல ஆனால் நான் 150 வயது வரை வாழ்ந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கிண்டலாக பேசியிருக்கிறார்.
இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அவர் அளித்த மற்றொரு பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2026 தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். பிரசாரம் செய்து ஆட்சியை மாற்றுவதற்காக உழைப்பேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், அதை பிறருக்கு விட்டுக்கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, "விஜய்க்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள இன்னும் நேரம் தேவை" என்று அவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது.
இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், சரத்குமாரின் சினிமா பார்வையும் அரசியல் நிலைப்பாடும் ஒரே நேரத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளன. சினிமாவிலும் அரசியலிலும் அனுபவமிக்க ஒருவராக, அவர் சொன்ன இந்த கருத்துகள் எதிர்வரும் நாட்களில் மேலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications