Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனக்கு ஒவ்வொரு படத்தின் போதும் இடையூறு ஏற்படுத்துபவர் யார்? வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மதுரையில் ரசிகர்களுடன் படம் பார்த்து செய்தியாளர்களிடம் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படக்குழுவினரும், தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும் மதுரையில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

Thaai Kizhavi Radhika Sarathkumar Sivakarthikeyan

தியேட்டர் விசிட்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குநரான சிவகுமார் முருகேசன் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்தத் தியேட்டர் இருக்கும் தெருவில்தான் வளர்ந்தவர் என்றும் கூறினார். அதனால் தான் இந்தப் படத்தின் முதல் தியேட்டர் அனுபவத்தை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தோம் என தெரிவித்தார்.

படம் ஓடும் போது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் சிரித்து, கைதட்டி, கொண்டாடியதை பார்த்த போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இடையூறு ஏற்படுத்தும் நபர்

ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் உங்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுகிறது என்று நீங்கள் சொல்கிறீர்களே, அதை யார் செய்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது: "எனக்கு இடையூறு யாரெல்லாம் ஏற்படுத்துறாங்க என்று நான் இப்போது சொல்லிவிட்டால் யூடியூப் சேனலுக்கும், நியூஸ் சேனல்களுக்கும் தலைப்பு கிடைத்துவிடும். நான் அதை யாரையும் குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. எனக்கு இப்படி பிரச்சனைகள் வருகிறது, அதைத் தாண்டி நான் வருகிறேன் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

என்னை ரசிக்கும் நாலு பேர் இருப்பார்கள். அவர்களுக்கு 'நமக்கு மட்டுமல்ல, இவருக்கும் பிரச்சனை வருகிறது; அதையும் தாண்டி தான் இவர் வருகிறார்' என்று புரியும். அவர்கள் அவர்களுடைய பிரச்சனைகளையும் தாண்டி வருவார்கள் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன். இதனால் இப்படிப்பட்ட கேள்விகள் தொடர்ந்து வரும் என்றால் இதை நான் சொல்லாமலும் இருக்க முடியும்." அவரது இந்த பதில் அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

'தாய் கிழவி' கதை

கிராமத்து பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில், பவுனுத்தாயி என்ற அதிகாரம் மிக்க வயதான பெண்ணாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். யாருக்கும் அஞ்சாத குணம், வட்டித் தொழில், குடும்பத்தினரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குணம் கொண்ட ஒரு பெண் திடீரென பக்கவாதத்தால் படுக்கையிலான நிலையில் சிக்கிக் கொள்கிறார்.

அவர் கையசைவில் சொல்ல முயலும் ரகசியம், குடும்பத்திற்குள் உருவாகும் பேராசை, 160 பவுன் நகையைச் சுற்றி நகரும் திருப்பங்கள் ஆகியவை கதையின் மையமாக அமைந்துள்ளன.

மதுரையில் இருந்து தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிய 'தாய் கிழவி' படக்குழு, ரசிகர்களின் ஆதரவால் உற்சாகமடைந்துள்ளது. இடையூறு குறித்து குற்றச்சாட்டு இல்லாமல், அதை ஒரு ஊக்கமாக மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+