41 வயதாகும் சிவகார்த்திகேயனுக்கு.. சேயோன் படத்தில் அம்மா யார் தெரியுமா? 39 வயது டாப் ஹீரோயினி!
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களால் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல பெரிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரைச் சுற்றியுள்ள புதிய அப்டேட் ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த படி
வெங்கட் பிரபு இயக்கவுள்ள பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் பிரபல VFX நிறுவனம் Lola VFX இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
41 வயது ஹீரோவுக்கு 39 வயது அம்மா
இந்த படத்தின் புதிய அப்டேட் என்னவென்றால், நடிகை ரம்யா நம்பீசன் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 39 வயதான ரம்யா நம்பீசன், 41 வயதான சிவகார்த்திகேயனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சாதாரண அம்மா கேரக்டர் அல்ல - கதைக்கு முக்கியமான, கதையின் கோட்டை தீர்மானிக்கும் ரோல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு
இந்த பிரம்மாண்டமான படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் கமர்ஷியல் அம்சங்களுடன் ஹை-கான்செப்ட் சை-ஃபை கதையாக படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சேயோன்' படத்தில் பிஸி
மறுபக்கம், சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
சிவகுமார் முருகேசன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை வெளியீட்டை இலக்காக வைத்து படக்குழு பணிபுரிந்து வருகிறது.
'அமரன்' வெற்றிக்கு பிறகு உயர்ந்த மார்க்கெட்
அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு அவருடைய சம்பளம், மார்க்கெட், பான்-இந்தியா ரீச் ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போது கன்டெண்ட் + கமர்ஷியல் என இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஹீரோவாக அவர் மாறி இருப்பது கோலிவுட்டில் பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது.

தயாரிப்பாளராகவும் வெற்றி
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டுள்ள சிவகார்த்திகேயன், தனது நண்பரும் இயக்குநருமான சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய்கிழவி படத்தை தயாரித்துள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
கன்டென்ட் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்
டிவி தொகுப்பாளராக தொடங்கி இன்று 100 - 150 கோடி வசூல் தரும் ஹீரோவாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவரும் நடிகராக வளர்ந்துள்ளார்.
அவங்க தியாகத்தை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. சந்தோஷமாக அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
சாதாரண காமெடி - ரொமான்ஸ் படங்களிலிருந்து தற்போது பீரியட், பயோபிக், சை-ஃபி போன்ற ஜானர்களில் நடித்து தனது ஸ்கிரிப்ட் தேர்வை மாற்றி வருவது அவரது கரியரில் புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் சைன்ஸ் ஃபிக்ஷன் படம், ரம்யா நம்பீசன் அம்மா கேரக்டர், சேயோன் படப்பிடிப்பு, தயாரிப்பாளராக புதிய முயற்சி - இப்படி பல பரபரப்பான அப்டேட்களால் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் மிகவும் பிஸியான மற்றும் எதிர்பார்ப்பு அதிகமான ஹீரோவாக மாறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications