தனுஷுடன் 13 வருஷத்துக்கு முன்பு நடந்த சம்பவம்.. கமல் ஆபீஸில் பார்த்த காட்சி! நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்
சென்னை: கேரளாவில் நடைபெற்ற 70வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழாவில் தமிழுக்கான சிறந்த நடிகர் விருதை பெற்ற சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan Wins Best Actor at 70th Filmfare Awards) மேடையில் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. 2024 தீபாவளிக்கு வெளியான அமரன் படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பிறகு அவர் பேசியது அவரது ஆரம்ப காலம், தனுஷுடன் இருந்த நினைவுகள், கமல்ஹாசன் அலுவலகத்தில் பார்த்த கனவு என்ன பல தகவல்களையும் உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்

சிவகார்த்திகேயன் பேச்சு
விருதை பெற்றபின் சிவகார்த்திகேயன் பேசுகையில்: "இந்த ஃபிலிம் ஃபேர் விருது தான் எனது முதல் விருது. நான் முதன்முதலாக இந்த விழாவுக்கு வந்தது தனுஷ் சாருடன் தான். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் ஆகியுள்ளது.
அமரன் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி.
இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான ஃபிலிம் ஃபேர் விருதுகளை பார்த்தேன். அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது.
நான் மிகவும் சீரியஸான மனிதன் இல்லை... ஜாலியான ஆள் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி.
முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும்... என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று ஃபிலிம் ஃபேர் அவார்டுடன் நிற்கிறேன். இந்த வரிகள் மேடையில் பெரும் கைதட்டலை பெற்றது.
சிவகார்த்திகேயன் - தனுஷ் உறவு
சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சியில் தனுஷின் பங்கு பற்றி அவர் பல முறை திறந்த மனதுடன் பேசியிருக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் இருந்த காலத்திலேயே அவரது திறமையை கவனித்த தனுஷ், அவரை தனது தயாரிப்பில் உருவான எதிர் நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அந்த படம் சிவகார்த்திகேயனுக்கு தனி ஹீரோ இமேஜ் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அவருக்கு என்ன ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதோடு பாக்ஸ் ஆபிஸ் நம்பிக்கை என்ற மூன்றையும் கொடுத்த முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
வதந்திக்கு பதிலடி
சில வருடங்களாகவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் பகை இருக்கிறது, என்றும் சிவகார்த்திகேயன் தனுஷ் செய்த உதவிகளை எல்லாம் மறந்து விட்டார்.. என்றெல்லாம் சில விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அத்தனை வதந்திக்கும் பதிலடி கொடுக்கிற மாதிரி இப்போது சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications