இந்த அயோக்கிய பெண் தான் காரணம்.. சூர்யா, ஜோதிகா லவ்.. சிவகுமார் ஆதங்கம், இப்படியும் நடந்ததாம்!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி சூர்யாவின் தந்தையான சிவக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். தன்னுடைய மகன் சூர்யா ஜோதிகாவை காதலிக்க காரணமே நடிகை ராதிகா தான், அவங்களால தான் நான் சூர்யா காதலுக்கு சம்மதமே சொன்னேன் என்று சில தகவல்களை சிவக்குமார் சொல்லி இருக்கிறார்.
நடிகர் சிவகுமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. 70s காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சித்தி அண்ணாமலை போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் தான் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

சிவக்குமார் பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் தங்கள் இருவருடைய சினிமா பயணங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி பல விஷயங்களை பேசி இருந்தனர். அதில் சிவகுமார் பேசியதுதான் பலரையும் வியக்க வைத்தது. சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். இதனால் பல இடங்களில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஆனாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொண்டதே கிடையாது.
சூர்யா ஜோதிகா காதல்
அதுபோலத்தான் இப்போது சூர்யா மற்றும் ஜோதிகா திருமண வாழ்க்கை, அவர்களுடைய காதல் போன்ற விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் ஆரம்பத்தில் ராதிகா பேசும் போது சூர்யா ஜோதிகாவை காதலிக்க காரணமே நான் தான். உயிரிலே கலந்தது படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா தனியாகத்தான் இருப்பாரு. யாருகிட்டயும் பேச மாட்டார். அப்போது நான் தான் பட ஹீரோயினி ஜோதிகாவுடன் பேசு பேசு என்று சொல்லுவேன்.
அப்போதெல்லாம் சூர்யா ரொம்ப வெட்கப்படுவாரு, நான் எப்படி பேச.. என்று சொல்லிட்டே இருப்பாரு. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கினார். அதற்கு பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க தொடங்கினாங்க. அந்த விஷயத்தை நான் சிவகுமார் அண்ணனிடம் சொன்னேன். முதலில் அவர் முடியாது என்று சொன்னாரு. அப்போ என்னிடம் சூர்யா போன் பண்ணி அக்கா அப்பா என்ன சொன்னாருன்னு கேட்பாரு..
ராதிகா செய்த கிண்டல்
நான்தான் உங்க அப்பா எப்பவும் போல தான் பாடிகிட்டு இருக்காரு.., ஆனா பேசி முடிச்சிடுவோம் என்று சொல்லுவேன் என்று சொன்னார். அதை தொடர்ந்து பேசிய சிவகுமார் ஆமா, சூர்யா ஜோதிகா லவ் உருவாக காரணமே இந்த அயோக்கிய பொண்ணுதான். இந்த பொண்ணு தான் என்கிட்ட வந்து சொல்லுச்சு. முதலில் நானும் வேண்டாம்னு யோசிச்சேன் பிறகு நான் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடிச்சிருக்கிறேன், எப்படி என் மகன் காதலுக்கு நோ சொல்ல முடியும்? அதனால ஓகே சொல்லிட்டேன் என்று கெத்தாக சிவகுமார் பேசினார்.

சூர்யாவின் பிடிவாதம்
மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, ஆரம்பத்தில் என்னுடைய மனைவிக்கும் விருப்பமில்லை. பிறகு என்னுடைய மகன் பிடிவாதமா நான் ஜோதிகாவை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னதால, சரி நம்ம பையன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கான் என்று நாங்களும் சம்மதித்து விட்டோம் என்று சிவக்குமார் ஜாலியாக பேசி இருக்கிறார்.
“அவரை நான் பார்க்கவே மாட்டேன்..” – திருமணம் பற்றி 54-வது பிறந்தநாளில் மனம் திறந்த நடிகை தபு
85 வயதான தான் எத்தனையோ கதாநாயகிகளுடன் நடிச்சி இருக்கிறேன் ஆனால் அதில் ராதிகா மட்டும் தான் என்னை அண்ணன்னு இப்பவும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. நான் எல்லா கதாநாயகிகளுடன் உருண்டு பிரண்டு நடிச்சாலும் என் மகன் சூர்யா எந்த கதாநாயகி மேலவும் கைப்படாமல் தான் நடிப்பான். அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சிவக்குமார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராதிகா சூர்யா அப்படி நடிக்க காரணம் இவர்தான் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
ராதிகா செம கலாய்
ஏன்னா ஹீரோயினியிடம் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது கூட சிவகுமார் அண்ணன் வந்து உட்கார்ந்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி மகன் நடிக்க முடியும்? அதனாலதான்... என்று ஜாலியாக கலாய்த்துக் கொண்டார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவக்குமார் இப்படியும் ஜாலியா பேசுவாரா? என்று கூட சிலர் ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications