Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்கே வந்து விஜயிக்கு ஷாக் தந்த சுதா! அப்பா உதவியை மறுத்த மகன் சஞ்சய்! நண்பனுக்காக வந்த அஜித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வரக்கூடிய படம் 'சிக்மா".. இந்த படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான JSK மீடியா இணை தயாரிப்பை மேற்கொள்கிறது. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், "விஜய் மகன் தான் இயக்க போகும் படத்துக்கு சிக்மா என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த தலைப்பு அருமையாக உள்ளது. இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஓடிடி, பான் இந்தியா படங்களுக்கு வசதியாக உள்ளது..

Cinema Jason Sanjay Vijay

சுரேஷ் சந்திரா எப்படி

ஆனால் இந்த படத்துக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை எப்படி கொண்டு வந்தார்கள்? என்ற கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஜேசனுக்கு உதவியாக இருப்பது சுரேஷ் சந்திராதான்.. இந்த படத்துக்கு லைகாவில் பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டபோதுகூட, சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்த ஜேசன், அங்கிள், படம் லேட்டாகுது என்று பிரச்சனையை சொல்லி கொண்டிருந்தாராம். அப்போது சுரேஷ் சந்திரா அருகிலிருந்த அஜித்தும், இதை கவனித்திருக்கிறார்.

போனை வாங்கி பேசிய அஜித்

உடனே போனை வாங்கி பேசிய அஜித், பைனான்ஸ் பிரச்சனை குறித்து கேட்டுள்ளார்.. பிறகு, ஏதாவது தயாரிப்பு பிரச்சனைகள் என்றால், புரொடியூசரை நானே உனக்கு தருகிறேன் என்று அஜித் ஜேசனிடம் சொன்னாராம்.

2 நாளைக்கு முன்புகூட விஜய்யின் அம்மா ஷோபா ஒரு பேட்டியில், அஜித், விஜய் குடும்பத்தினர் நட்பாகவே உள்ளனர்.. குடும்ப நண்பர்களாகவும் பலமுறை சந்தித்து பேசிக் கொள்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். அந்தவகையில் அஜித் குடும்பத்தில் பழகக் கூடியவராக ஜேசன் உள்ளார்..

அஜித் குமார் - ஷாலினி

அதுமட்டுமல்ல, தன்னுடைய புதிய படம் குறித்து ஜேசன் சொன்னதுமே, சுரேஷை மேனேஜராக வைத்து கொள்ளும்படி அனுப்பி வைத்ததே ஷாலினிதானாம்.

இரு குடும்பத்தினரின் நட்பு அடிப்படையில்தான் சுரேஷ் சந்திரா ஜேசன் படத்தில் பணிபுரிகிறாரே தவிர, எதிரி முகாமிலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் கிடையாது.
எனினும், எதையும் வெளியில் அஜித், விஜய் இருவரும் ரசிகர்களுக்காக எதிர்ப்புத்தன்மையை காட்டிக் கொண்டிருப்பது பிசினஸ்க்காகத்தான்..

ஜேசன் சஞ்சய்க்கு உதவும் அஜித்

விஜய் சேதுபதி தன்னுடைய மகனுக்கு பின்னணியில் இருந்து உதவும்போது, விஜய் தன் மகனிடம் பேசுவதுகூட இல்லை.. அதனால்தான் அஜித் இதில் தலையிட்டு உதவி செய்வதாக சொல்வதெல்லாம் கட்டுக்கதை.. தன்னுடைய முதல் படம், சுயமுயற்சியில் மட்டுமே நடக்க வேண்டும் என்பது சஞ்சயின் விருப்பமாக இருந்து வருகிறது.

இயக்குனர் சுதா கோங்குரா விஜய்க்கு போன் செய்து, கதை சொல்ல வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். விஜய்யும் அவரை வர சொல்லி உள்ளார்..

விஜய்க்கு சுதா தந்த அதிர்ச்சி

அதற்கு பிறகுதான் விஜய்க்கு தெரிந்தது, சஞ்சய்க்கு கதை சொல்லவே சுதா கோங்குரா வந்திருக்கிறார் என்று. அப்போது விஜய்க்கே அது ஷாக்காக இருந்ததாம்.. பராசக்தி படத்துக்குதான் சஞ்சய்யிடம் கதை சொன்ன போனார் சுதா கோங்குரா.. ஆனால் சஞ்சய், தனக்கு நடிப்பைவிட, டைரக்‌ஷனில்தான் அதிக விருப்பம் என்று சொல்லிவிட்டார்..

இந்த அடிப்படையில்தான் விஜய், சஞ்சய் இருக்கிறார்களே தவிர, வேறு எந்த விரிசலும் இல்லை.. விஜய் நினைத்திருந்தால் எப்போதோ மகனை வைத்து படத்தை எடுத்திருக்கவோ, டைரக்ட் செய்ய உதவியிருக்கவோ முடியும். ஆனால் சஞ்சயின் விருப்பத்துக்காகவே மதிப்பு தந்து சுதந்திரம் தந்திருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+