தாய் கிழவி டிரைலரில் விஜய் ரசிகர்களை கவர்ந்த டயலாக்! சிவகார்த்திகேயன் ஒரு முடிவோட தான் இருக்கிறார் போல
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் படங்களில் ரசிகர்களின் கவனத்தை முழுவதும் தன் பக்கம் திருப்பி வைத்திருக்கும் படம் தாய் கிழவி. நடிகை ராதிகா சரத்குமார் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இன்று நடைபெற உள்ள ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியான டிரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
முதலில் ரசிகர்களை கவர்ந்தது ஒரு அரசியல் நையாண்டி கலந்த டயலாக். மருத்துவமனை காட்சியில் "கலைஞர் காப்பீடு இருக்கா? அம்மா காப்பீடு இருக்கா?" என்று தொடங்கி பல கட்சிகள் பெயர்கள் வரிசையாக சொல்லப்படும் அந்த தருணத்தில் தவெக குறித்த குறிப்பும் இடம்பெறுகிறது.

இது வெளிவந்த உடனே சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, "சிவகார்த்திகேயன் தயாரிப்பிலேயே தவெக டச்" என்று கொண்டாடப்படும் அளவுக்கு ரீச்சை பெற்றுள்ளது. பராசக்தி பட ரிலீஸ் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருந்த நிலையில், இந்த படத்தின் அரசியல் நகைச்சுவை டோன் எப்படி இருக்கும் என்பதையும் அந்த ஒரு காட்சி சொல்லி விடுகிறது.
இப்படத்தின் கதைக்களம் ஒரு குடும்பத்தில் நடக்கும் சொத்து பிரச்சனையை மையமாக கொண்டதாக இருந்தாலும், அதை சொல்லும் விதம் தான் முற்றிலும் புதிதாக உள்ளது. கணவர் உயிரிழந்த பிறகு வாரிசுகள் சொத்தில் பங்கு கேட்க, "சாகுற வரைக்கும் என் சொத்தை நானே வைத்துக்கிட்டு அனுபவிப்பேன்" என்று நேராக எதிர்கொள்ளும் வயதான பெண். அதன் பிறகு திடீரென படுக்கையிலேயே ஆகிவிடும் அவர், சொல்ல முயலும் ஒரு ரகசியம்... அதை புரிந்து கொள்ள முடியாமல் சுற்றி திரியும் வாரிசுகள்... இதை முழுக்க நையாண்டி கலந்த டார்க் காமெடி பாணியில் சொல்லியிருப்பது டிரைலரிலேயே தெரிகிறது.
இந்த படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ராதிகா சரத்குமார் எடுத்திருக்கும் அவதாரம். ப்ரோஸ்தெடிக் மேக்கப்பில் முழுக்க வயதான பாட்டியாக, ஊர் பாஷையில் பேசும் விதம், இடைச்செருகல் கெட்ட வார்த்தைகள், புகைப்பிடிக்கும் காட்சிகள்-இவை எல்லாம் அவர் இதுவரை செய்திராத ஒரு முற்றிலும் வேறுபட்ட நடிப்பை காட்டுகிறது. ஒரு பக்கம் சிரிக்க வைக்கும், மறுபக்கம் கதையின் பின்னணியில் ஒரு வலி இருப்பதை உணர்த்தும் அந்த லேயர்டான பர்ஃபார்மன்ஸ் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய் கிழவி நடிகர்கள்
சிங்கம்புலி, பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பதால், ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரங்களின் ரியாக்ஷன்களால் நகைச்சுவை வெடிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. ஒரு இறப்பு வீட்டை மையமாக வைத்து கதை நகரும் அமைப்பு, சமீபத்தில் வந்த பெருசு படத்தை நினைவூட்டினாலும், பெண்மையை மையமாக வைத்து சொத்து - உறவு - பேராசை ஆகியவற்றை கிண்டல் கலந்த பாணியில் பேசுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு
சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருப்பது கூட சுமாரான விஷயம் அல்ல. இயக்குநர் சிவகுமார் முருகேசன் மீது இருந்த நம்பிக்கையால்தான் அவர் தனது அடுத்த பட வேலைகளை தள்ளி வைத்து இந்த படத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதுவே இந்த படத்தின் கண்டென்ட் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை காட்டுகிறது.
டிரைலரின் கடைசி காட்சியில் "படம் எப்படி இருந்தது?" என்று கேட்கும் போது கூட தாய் கிழவி தன் ஸ்டைலில் கெட்ட வார்த்தையோடு பதிலளிக்கும் தருணம் ரசிகர்களை கைத்தட்ட வைத்துள்ளது. அவர் தலையில் என்ன ஆனது? அவர் உயிருடன் இருக்கிறாரா? அவர் சொல்ல நினைத்த ரகசியம் என்ன? சொத்து யாருக்கு போகிறது? என்ற கேள்விகளை எழுப்பி வைத்து டிரைலர் முடிகிறது.
பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக இருக்கும் தாய் கிழவி, ராதிகாவின் மாறுபட்ட நடிப்பு, அரசியல் நையாண்டி, குடும்ப டார்க் காமெடி, விஜய் ரசிகர்களை கவரும் தவெக டயலாக்-இந்த எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இந்த வாரம் திரையரங்குகளில் பெரும் கவனம் பெறும் படமாக மாறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications