தேங்காய் சீனிவாசனின் வீடு தேடி வந்த ரூ.25 லட்சம்! வாரிசுக்கு எம்ஜிஆர் தந்த பொட்டலம்.. மறக்க முடியுமா
சென்னை: தில்லு முல்லு கதாபாத்திரத்தை தேங்காய் சீனிவாசனை தவிர வேறு யார் சிறப்பாக செய்துவிட முடியும்?? என்றுதான் இன்றுவரை பேசுவார்கள்.. அந்த அளவுக்கு அந்த படத்தின் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது.. பலவிதமான கேரக்டர்களில் நடித்த தேங்காய் சீனிவாசன், எம்ஜிஆரின் விசுவாசியாகவே இருந்து மறைந்து போனது திரையுலகினருக்கே பல சமயங்களில் வியப்பை தந்துள்ளது.
தேங்காய் சீனிவாசனின் அப்பா ராஜவேல், கண்ணையா நாடகக் குழுவில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டவர். பல புகழ்பெற்ற நாடகங்களை பின்னாளில் நடத்தினார்.. ஆனால் தன்னை போல் தன்னுடைய மகன் நாடகத்துறைக்கு வரக் கூடாது என்று நினைத்தார்.. ஆனால் வாழ்க்கை வேறு கணக்கை போட்டு தந்தது..

மகன் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழிற்கல்வி முடிக்க வைத்து, ஐ.சி.எஃப்பில் வேலைக்கும் சேர்த்துவிட்டார்.. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, சந்திரபாபு, எம்ஆர் ராதாவின் தீவிர விசிறியாக இருந்ததால், மொத்த கவனம் முழுவதும் நடிப்பிலேயே தேங்காய் சீனிவாசனுக்கு குவிந்தது.
தேங்காய் வியாபாரி
வில்லன், குணச்சித்திரம் என அனைத்து ரோல்களையும் தனது அசாத்திய நடிப்பால் வென்று காட்டியவர். தேங்காய் சீனிவாசனின் இயற்பெயர் சீனிவாசன்.
"கல் மனம்" என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார் தேங்காய் சீனிவாசன். அந்த நாடகத்துக்கு டணால் தங்கவேலு தலைமை தாங்கி பேசும்போது, தேங்காய் வியாபாரியாக நடித்த சீனிவாசன் நன்றாக நடித்திருக்கிறார்.. இனிமேல் அவர் தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்கப்படுவார் என்று பாராட்டினார்.. அது முதல் அவரது பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.
40 வயதுக்குள் 400 படங்களில் நடித்து முடித்தார் தேங்காய் சீனிவாசன்.. இதில் பல வெற்றிப்படங்களுக்கு தேங்காய் சீனிவாசன் வித்திட்டார்.. குறிப்பாக சித்ராலயா' கோபுவின் காசேதான் கடவுளடா' படத்தில் அப்பாசாமியாக நடித்தது, பட்டிதொட்டி எங்கும் தேங்காய் சீனிவாசனின் புகழை மக்களிடம் சேர்த்தது..
தேங்காய் சீனிவாசனுக்கு கட் அவுட்
சென்னை பைலட் தியேட்டர் வாசலிலேயே பெரிய கட் அவுட் தேங்காய் சீனிவாசனுக்கு வைக்கப்பட்டது... இது எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைத்திராத அங்கீகாரம், என்றாலும் அந்த படத்தின் கதாநாயகன் முத்துராமனுக்கே இது சற்று நெருடலை தந்ததாக சொல்வார்கள்.. எனினும், தேங்காய் சீனிவாசன் என்பதால், அதை முத்துராமன் பெரிதுபடுத்துவில்லையாம்.
எம்ஜிஆரை தன்னுடைய கடவுளாகவே பார்த்தார் தேங்காய் சீனிவாசன்.. ஆனால், எம்ஜிஆருக்கு பிடிக்காத குடிப்பழக்கம் மட்டும் தேங்காய் சீனிவாசனிடம் இருந்தது..
குடிகாரன் - ஹீரோ
ஒருமுறை குடிகாரன் என்ற படத்துக்கு தலைமை தாங்க எம்ஜிஆர் வந்தார்.. இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டதற்கு, தேங்காய் சீனிவாசன் என்றார்கள்.. உடனே எம்ஜிஆர், பொருத்தமான ஹீரோதான் என்றாராம்.
இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த விழாவுக்கு எம்ஜிஆர் வரப்போகிறார் என்றே தேங்காய் சீனிவாசனுக்கு தெரியாது.. மேடையில் அவரை பார்த்ததுமே பதறிவிட்டாராம்.. காரணம், நிஜமாகவே மது குடித்துவிட்டு வந்திருந்தார் தேங்காய் சீனிவாசன்.. அப்போதே தேங்காய் சீனிவாசனை கண்டித்த எம்ஜிஆர், தொழில் செய்யும் இடத்தில் இப்படியா வருவது, என்று சத்தம் போட்டுள்ளார்.
பண உதவி
"கிருஷ்ணன் வந்தான்" என்ற படத்தை தயாரித்து படம் பணம் இல்லாமல் நின்றபோது, எம்ஜிஆரை சந்தித்து உதவி கேட்டுள்ளார் எம்ஜிஆர்.. அப்போதே படம் தயாரிக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன் என் பேச்ச நீ கேட்கவே இல்லை என்று திட்டி அனுப்பினாராம்.
ஆனாலும், தேங்காய் சீனிவாசன் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை தந்து தேங்காய் சீனிவாசன் வீட்டில் வைத்துள்ளார் எம்ஜிஆர்.. அன்று 25 லட்ச ரூபாய் என்பது இன்று எத்தனையோ கோடிகளுக்கு சமம்.. அந்தஅளவுக்கு தேங்காய் சீனிவாசனை எம்ஜிஆருக்கும் பிடிக்குமாம்.
எம்ஜிஆர் அஞ்சலி
கடைசிவரை எம்ஜிஆரின் தீவிர தொண்டராகவே இருந்தார் தேங்காய் சீனிவாசன்.. அமெரிக்காவில் சிகிச்சைக்காக எம்ஜிஆர் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது..
அப்போது தேங்காய் சீனிவாசன், தன்னுடைய பாக்கெட்டில் ரூ.100 வைத்துக்கொண்டு, "என் வாத்தியாருக்கு நான்தான் முதல் மாலை போடுவேன்" என்று சொல்லி கொண்டேயிருந்தாராம்..
அந்த நேரத்தில் எதிர்பாராத நிறைய செலவுகள் வந்ததாம்.. அப்போதுகூட 100 ரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுக்கவில்லை...
பொட்டலம் தந்த எம்ஜிஆர்
ஆனால், தேங்காய் சீனிவாசனுக்குதான் எம்ஜிஆர் இறுதி மாலை போடும்படி ஆகிவிட்டது. 1987-ல் தேங்காய் சீனிவாசன் இறந்தபோது, ஜானகி அம்மாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் எம்ஜிஆர்..
அப்போது தேங்காய் சீனிவாசனின் மகனை தனியாக அழைத்து, ஒரு பொட்டலத்தை கையில் தந்து, உன் அம்மாவிடம் கொண்டுபோய் கொடு என்று தந்துவிட்டு போயிருக்கிறார். அதில் எம்ஜிஆர் என்ன தந்திருப்பார் என்பது அங்கிருந்த அனைவருமே அறிந்த ஒன்றுதான்...!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications