சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து
சென்னை: நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்ததாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்குள் இன்னொரு விஷயம் கூட சேர்ந்து இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கி விட்டது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயை பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் "குடும்பத்துக்குள் ஏதாவது பெரிய பிரச்சனை நடக்கிறதா?" என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்த விவாகரத்து செய்தி வெளியானதும் முதலில் ரசிகர்கள் அதைப் நம்பவே இல்லை. விஜய் - சங்கீதா ஜோடி என்றால் சினிமா உலகில் மிகவும் அமைதியாகவும், பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் என்ற பெயர் இருந்தது. ஆரம்ப காலத்திலிருந்தே சங்கீதா வெளிச்சத்திற்கு வராதவர். விழாக்கள், ஆடியோ லாஞ்ச் போன்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் விஜயுடன் தோன்றுவார். இல்லையெனில் குடும்பத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். அதனால் தான் இந்த விவாகரத்து தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக மாறியது.

சில வட்டாரங்களில் "நீண்ட நாட்களாக இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள்", "பிள்ளைகளின் படிப்பு காரணமாக சங்கீதா வெளிநாட்டில் அதிக நேரம் இருந்தார்" போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரைக்கும் விஜய் தரப்பிலிருந்தோ, சங்கீதா தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஜேசன் சஞ்சய் தனது Instagram பக்கத்தில் விஜயை அன்பாலோ செய்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்ததும் இந்த விவகாரம் மேலும் தீப்பிடித்தது போல ஆகிவிட்டது. சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நடக்கும் விஷயம் என்றாலும், இது ஒரு பெரிய நட்சத்திரத்தின் குடும்பம் என்பதால் ரசிகர்கள் அதைக் கூடுதல் கவனத்துடன் பார்க்கிறார்கள். சிலர் "அப்பா - மகன் இடையே தூரம் வந்துவிட்டதா?" என்று கவலை தெரிவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் "சோஷியல் மீடியாவை வைத்து முடிவு சொல்ல முடியாது" என்று அமைதியாக இருக்கச் சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
விஜயின் குடும்பத்தைப் பற்றி பேசும்போது, அவர் எப்போதுமே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தவர். அரசியல் வருகை, புதிய கட்சி, சினிமா விலகல் போன்ற பெரிய முடிவுகள் வந்தாலும் கூட குடும்பத்தை வெளியில் பேச அனுமதிக்காதவர். அதனால் தான் இந்த விவகாரம் குறித்து அவர் எப்போது, எப்படி பதில் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ரசிகர்கள் கருத்து இரண்டு வகையாகப் பிரிந்திருக்கிறது. ஒரு தரப்பு "இது எல்லாம் வதந்தி தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நம்பக்கூடாது" என்று கூறுகிறது. இன்னொரு தரப்பு "குடும்ப விஷயம் என்பதால் அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்" என்று அமைதியாக இருக்கச் சொல்லுகிறது. மேலும் சிலர் "எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்" என்று தெரிவித்து வருகிறார்கள்.
மொத்தத்தில் பார்த்தால், விவாகரத்து வழக்கு தகவல், மகன் இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்ததாக வந்த செய்தி - இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து விஜய் குடும்பத்தை பற்றிய பேச்சை மிக பெரிய அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. ஆனால் உண்மை என்ன, அடுத்ததாக என்ன நடக்கிறது என்பதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வருவது வரை காத்திருக்க வேண்டியதுதான் நிலைமை.












Click it and Unblock the Notifications