யு.எஸ்சுக்கு பணியும் அரபு நாடுகளின் அவல நிலை!
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கள் செல்வத்தை பெருமளவு முதலீடு செய்த அரபு நாடுகளுக்கு பேராசை பெருநஷ்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய பொருளாதாரச் சரிவில் அரபு நாடுகள் 2.5 டிரில்லியன் டாலர்கள் இழந்துள்ளன். இந்திய மதிப்பில் இது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர் அதாவது ருபாயில் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் கோடிகள் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட 4 மாதங்களில் இழந்துள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் 60 சதவீதம் அபிவிருத்திப் பணிகள் நின்று போய்விட்டன. (துபாயிலிருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் 18 ஜனவரி 2009 செய்தி காண்க).
அபுதாபியைச் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு 125 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் 62500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா சொல்வதை தட்டாமல் பின்பற்றும், அமெரிக்காவுக்கு கொடி பிடித்து வெண்சாமரம் வீசும் அரபு தலைவர்கள் எவ்வளவுபட்டாலும் பாடம் கற்பதாகத் தெரியவில்லை.
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிதி நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முதலீடு செய்து பெருமளவு பணத்தை இழந்துளளன. இதனால் வளைகுடா நாடுகளின் கஜானா காலியாகி எதிர்பார்க்காத அளவு பொருளாதாரச் சரிவை அடைந்துள்ளன.
அமெரிக்காவின் சிட்டி பேங்கின் சிட்டி குருப்பில் குவைத் நிறுவனம் ஒன்று ரூ. 15,000 கோடி முதலீடு செய்துள்ளது. அபுதாபி நிறுவனம் ஒன்று ரூ. 37,500 கோடி முதலீடு செய்துள்ளது. சிட்டி பேங்க் சமீபத்தில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. சிட்டி பேங்கின் மிகப்பெரிய பங்குதாரர் (50 சதம்) சவுதி இளவரசர் வலீத் பின் தலால் ஏறத்தாழ ரூ. 25,000 கோடியை இழந்துள்ளார்.
வட்டியைக் கொண்டு மக்களைச் சுரண்ட நினைத்த அமெரிக்க, ஐரோப்பிய நிதி நிறுவனங்களுக்கும் அவற்றில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் மரண அடி விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications