நிச்சயமற்ற பயங்கள்...
Subscribe to Oneindia Tamil

தீவைத்து கொளுத்தி முழுதும்
எரியும்வரைக்காத்திருந்து
குளித்து வீடு திரும்பியபின்னும்
தொடர்கிறது ஆவியாய் வந்துவிடக்கூடிய
நிச்சயமற்ற பயங்கள்...
சாலைவிபத்தில் இறந்த நண்பனின்
மரண நினைவு தொடர்கிறது
என் எல்லா பயணங்களிலும்....
பல மரணம் பார்த்தபின்னும்
இருத்தல் பற்றிய நம்பிக்கை
நீள்கிறது நாளைய துரத்தல்களுடன்...
நீரில் மூழ்கிச் செத்தவனின்
குடும்பம் தவிர்க்கிறது கவனமாய்
கடல்பயணங்களை...
சாமிக்கும் எனக்குமான
சுய தொடர்புகளில்
எழுபிறப்பும்...
உணரவியல்லா உயிரை
எங்கே வைத்தாய்?
என்பது பிரதானமானதாயும்
சாவின் பிறகான நான்
எதுவென்பதும் தொடர்கிறது
நிச்சயமாய் சொல்வேன் உங்களுக்கும்
சாமி சொன்னால்....












Click it and Unblock the Notifications