80 டாலருக்கு கீழே விலை சரிந்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்....
ஆக கச்சா எண்ணெய் விலை குறைவு என்பது உலக அளவில் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் அடையாளம் தான். இது 80 டாலருக்குக் கீழே வந்தால் தொழில்துறைகளின் நிலைமை படுமோசம் என்று அர்த்தம். அதாவது பல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சீக்கு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அர்த்தம். இதனால் தான் 80 டாலருக்கு கீழே விலை சரிந்தால் பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் எதிர்மறையானதாக, மிகக் கடுமையானதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
தங்கத்தின் நிலையும் இதே தான். பொருளாதாரம் நல்லா இருந்தால் மக்களிடம் கையில் காசு புழங்கும். மக்கள் தங்க நகைகளை வாங்குவதும் அதிகமாக இருக்கும். நிலைமை சரியில்லாவிட்டால் இருக்கும் நகையை முத்தூட் பைனான்சுக்கு போகாமல் காப்பதே பெரும்பாடாக இருக்கும்.
அதே போல பொருளாதார நிலைமை நன்றாக இருந்தால் டாலர்களில் முதலீடு செய்யும் பெரும் பணக்காரர்களும் நிறுவனங்களும், நிலைமை சரியில்லாவிட்டால் அதை தங்கத்தில் போட்டு வைப்பது வழக்கம். இது தான் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இதனாலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

ஆனால், விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததாலும், நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாலும், பல நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலை நிலவுவதாலும், வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருப்பதாலும் தங்கத்துக்கு டிமாண்ட் சரிந்துவிட்டது. இதனால் தங்கத்தில் முதலீடு என்பது பெரும் பணக்காரர்களுக்கு பெரிய அளவில் லாபம் தரவில்லை. இதனால் அவர்களும் அந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று மீண்டும் டாலர்களிலேயே (டாலர்களில் வரும் பங்குகள், பத்திரங்கள்) முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications