For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இன்டர்ஸ்டெல்லார்': இப்படி எல்லாம் கூட நடக்குமா?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

இன்டர்ஸ்டெல்லார் படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கட்டி பரவிக் கொண்டிருந்தாலும் பொது ஜனங்களுக்குப் புரியாத இயற்பியல் விதிகளை மையமாக வைத்து ஒரு படத்தை எடுத்ததற்காக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த M.C. Escher என்ற மிக வித்தியாசமான ஒரு கலைஞரால் மிகவும் ஈர்க்கப்படட்டவர் நோலன். இவர் கணிதக் கோட்பாடுகளை தனது கலைப் படைப்புகளில் புகுத்தி ஆச்சரியப்பட வைத்த மனிதர். Lionel Penrose இவரது மகன் Roger Penrose மற்றும் Escher ஆகியோர் உருவாக்கிய Penrose steps உலகப் பிரசித்தமானவை.

ஒவ்வொரு 90 டிகிரியிலும் திரும்பித் திரும்பி ஏறிச் செல்லும் இந்த முடிவில்லா படிகளில் நீங்கள் ஏறிக் கொண்டே இருக்கலாம்.. இவை முடிவதே இல்லை. கிறிஸ்டோபர் நோலனுக்கு மிகவும் பிடித்த கலைஞன் இந்த Escher.

இப்படிப்பட்ட ஒருவரின் படைப்புகளில் ஈர்க்கப்பட்ட ஒரு ஹாலிவுட் இயக்குனரின் படங்கள் எப்படி இருக்கும்?. அதைத் தான் தனது படங்களில் உருவகப்படுத்தி படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார் கிறிஸ்டோபர் நோலன். இவரது கதை சொல்லும் திறமைக்கும் காட்சிகளால் அசரடிக்கும் முயற்சிகளுக்கும் உதாரணமான படம் Inception.

நிதர்சனத்தில் சாத்தியமில்லாதவை ஆனால், அறிவியல் விதிகளின்படி சாத்தியமானவை என கருதப்படும் விஷயங்கள் தான் கிறிஸ்டோபர் நோலனின் கதைக் கருக்கள். இதைத் தான் தனது இன்டர்ஸ்டெல்லார் படத்திலும் கையாண்டுள்ளார் நோலன்.

இந்தப் படத்தை பார்க்கும் முன் சில அடிப்படை அறிவியல் விதிகளை ஒரு முறை உணர்ந்து கொண்டால், படம் முடியும்போது, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே என்ற ஆதங்கம் வரும். இல்லாவிட்டால், இன்னும் நிறைய கிராபிக்ஸ்- ஆக்ஷன் எதிர்பார்த்தோம்.. ஏமாத்திபுட்டாரே, இந்த படத்துக்குத் தான் இவ்வளவு பில்ட்-அப்பா என்ற கோபம் கூட வரலாம்.

பக்கத்தில் உட்கார்ந்துள்ள நண்பரோ, மகளோ கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் உனக்கு பாப்கார்ன் மட்டும் போதுமா, பெப்சியும் வேணுமா என்று சீட்டை விட்டு எஸ்கேப் ஆகக் கூட தோணும்.

English summary
By the time Christopher Nolan signed up to direct Interstellar and started writing its script, astrophysicist Kip Thorne had been working with Nolan’s brother, Jonathan on getting his ideas onto film for years. When Chris and Thorne met, they quickly found common ground: Thorne wanted science in the story, an
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X