Fact Check: இலவசமாக 1.5 கோடி 5 ஸ்டார் ஏசிக்களை வழங்கும் மோடி அரசு? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன!
டெல்லி: மத்திய அரசு புதிதாக 'பிஎம் மோடி ஏசி யோஜனா 2025' என்ற திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதன் கீழ் இலவசமாக ஏசி யூனிட்கள் வழங்கப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இது உண்மை தானா.. நிஜமாகவே மத்திய அரசு ஏசிக்களை வழங்குகிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக இணையத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது மத்திய அரசு புதிதாக 'பிஎம் மோடி ஏசி யோஜனா 2025' என்ற திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதனால் தகுதிவாய்ந்த மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 5 ஸ்டார் ஏசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்காக 1.5 கோடி ஏசி யூனிட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோடை ஏசி
கோடை வெயில் படுத்தி எடுத்து வரும் நிலையில், இந்தத் தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் இது உண்மை என்றே நினைத்தனர். வெயில் அதிகரித்து வரும் சூழலில் இத்திட்டத்தில் எப்படி புதிய ஏசி யூனிட்களை வாங்குவது என்றும் கூட மக்கள் தேட தொடங்கினர். இதனால் இணையத்தில் இது டிரெண்டானது.
அதாவது பிரதமர் மோடியின் ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் 1.5 கோடி ஏசி யூனிட்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதிலும் அடுத்த மாதம், அதாவது மே 2025 முதல் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய மின்சார துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் இத்திடத்திற்குத் தேவையான ஏசி யூனிட்களை ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இணையத்தில் பரவிய தகவல்
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களைப் பரப்பினர். அதன்படி நெட்டிசன் ஒருவர், "மத்திய அரசு பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025 இன் கீழ் அனைவருக்கும் இலவச 5 நட்சத்திர ஏசி வழங்கும். இந்தத் திட்டம் மே மாதம் விரைவில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக 1.5 கோடி ஏசிகள் தயார் செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் மிகப் பெரிய ஏசி பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏசி வேண்டும் என்றால் நீங்கள் முறையாகக் கோரிக்கை விடுக்க வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் உங்களுக்கு ஒரு புதிய ஏசி வழங்கப்படும்.. இந்திய அரசு விரைவில் அனைவருக்கும் இலவச ஏசி வழங்கும்! கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் 5 ஸ்டார் ஏசிக்களை பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன
இதுபோன்ற பதிவுகள் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனால் பலரும் இதை உண்மை என நம்பத் தொடங்கினர். பலரும் இதை எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்றும் தேட தொடங்கினர். ஆனால், இது உண்மை தானா என நாம் தேடியபோது இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அதேநேரம் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான பிஐபி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
விளக்கம்
அதில் பிஐபி தங்கள் ட்விட்டரில், "பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025 திட்டத்தின் கீழ், அரசு இலவச 5 ஸ்டார் ஏசி யூனிட்களை வழங்கவுள்ளதாகவும் இதற்கு 1.5 கோடி ஏசிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் போலியானது. இலவசமாக 5 ஸ்டார் ஏசிக்களை வழங்கும் வகையில் எந்தவொரு திட்டமும் மின்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்படவில்லை" என்று விளக்கமளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
"பிஎம் மோடி ஏசி யோஜனா 2025" திட்டத்தின் கீழ் 1.5 கோடி ஏசி யூனிட்களை இலவசமாகத் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
முடிவு
மத்திய அரசிடம் அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை.. இது பொய்யான தகவல் என பிஐபி விளக்கமளித்துள்ளது.
ரேட்டிங்
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications