டெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா? உண்மை என்ன?
டெல்லி: லாக்டவுனில் சிக்கி டெல்லியில் தவிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியானது பொய் செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனால் டெல்லியில் படித்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் தாங்களே தனியாக பேருந்து ஏற்பாடு செய்து கொள்ள அனுமதி கேட்டனர். இதனால் அவர்கள் தனி பேருந்தில் பயணம் மேற்கொண்டனர் என்பது செய்தி.

ஆனால் டெல்லி பல்கலக் கழகம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் தந்துள்ள டெல்லி பல்கலைக் கழகம், லாக்டவுனால் மாணவர்களை வெளியேறவோ அல்லது சொந்த ஊர் செல்ல ஏற்பாடுகள் செய்யவோ நிர்வாகம் ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனால் பிற மாநிலங்களைப் போல டெல்லியிலும் மாணவர்கள் சிக்கி இருக்கின்றனர். மத்திய அரசு இப்போதுதான் ரயில் சேவைக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதுவும் கன்பார்ம் செய்யப்பட்ட இ டிக்கெட் இருந்தால்தான் ரயிலில் பயணிக்க முடியும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications