வங்கி கணக்கில் போட்ட பணத்தை அரசு திரும்ப எடுத்துவிடுமாம்.. தீயாக பரவும் வதந்தி.. நம்பாதீர்கள்
டெல்லி: ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட பணம் அரசால் திரும்பப் பெறப்படும் என்று சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளன.
கொரோனா விவகாரத்தை வைத்துக்கொண்டு பல்வேறு போலி மெசேஜ்கள் பரவுகின்றன. அதில் ஒரு மெசேஜ், கரிப் கல்யாண் திட்டம் தொடர்பானது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக, பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், வங்கிக் கணக்கிற்கு தலா ரூ .500 மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பலனாளிகள் வங்கியிலிருந்து எடுக்காவிட்டால், அந்த பணம், திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடக வதந்திகள் கூறுகின்றன.

இது பீதியை ஏற்படுத்தும் ஒரு குறும்பு செய்தி. பணப் பரிமாற்றம் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டபோது, பணத்தை வங்கி கணக்கிலிருந்து திரும்பப் பெறாவிட்டால், அரசால், அந்த பணம் திரும்பப் பெறப்படும் என்பது போல அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
நிவாரண நடவடிக்கையாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ .500 ஏழைகளுக்கு பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணத்தை எப்போது, எடுக்க வேண்டும் என்பது குறித்த எந்தவொரு விதிமுறையையும் அரசு குறிப்பிடவில்லை. இது முற்றிலும் பலனாளியின் விருப்பம்தான். எனவே, தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்பிவிடாதீர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications