Fact Check: நோட்டா வெற்றி பெற்றால் குடியரசு தலைவர் ஆட்சியா? பரவி வரும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: நோட்டாவுக்கு 35%க்கு மேல் வாக்குகள் கிடைத்தால், அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் செல்லாது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, 6 மாதங்களில் மீண்டும் தேர்தல் வரும் என ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் தொடர்பான போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அப்படி நோட்டா தொடர்பாகவும் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

நோட்டா என்பது என்ன?: நோட்டா என்பது ஒரு வாக்காளர், தனது தொகுதியில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் தனது வாக்கை செலுத்த விரும்பவில்லை என்பதைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இந்திய தேர்தல் விதிகளின் படி உள்ளது.
வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களின் வாக்குகள் கள்ள ஓட்டாக மாறிவிடாமல் தடுக்கப்படுவதற்கு நோட்டா பயன்படுகிறது. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடுவதற்கும் நோட்டாவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் காரணமாக அமைந்திருக்கின்றன.
நோட்டா வாக்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' (None of the Above) என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக 2013ல் ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் நோட்டாவுக்கு அடுத்த இடத்தைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை. எனினும் இதுவரை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டதில்லை.
நோட்டாவுக்கு மவுசு: 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் (பதிவான மொத்த வாக்குகளில் 1.08%) பதிவாகின. தமிழ்நாட்டில் 5 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 4.99% (46,559 வாக்குகள்) நோட்டாவுக்குச் சென்றன. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தன. புதுக்கோட்டை தொகுதி மறு சீரமைப்பில் பறிபோனதால் புதுக்கோட்டை பகுதி மக்கள் பெரும்பாலானோர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
எங்கு அதிகம்: 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சுமார் 51,000 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தன. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் திருச்சி தொகுதியில் 43,000 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. இந்த முறையும், புதுக்கோட்டை தொகுதி மீட்புக்குழுவினர், நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
2019இல் இந்திய அளவில் 65 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு 39 தொகுதிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 53 ஆயிரம் வாக்குகள் விழுந்தன.
மறு தேர்தல் நடத்தப்படுமா?: இந்நிலையில், நோட்டா தொடர்பாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பதிவாகும் மொத்த வாக்குகளில் நோட்டாவுக்கு 35 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருந்தால் அந்த தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது, அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும், ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?: வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே. அப்படி எந்த விதிகளும் இல்லை.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் நோட்டாவுக்கு அடுத்த இடத்தைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை. எனினும் இதுவரை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டதில்லை. இந்தியாவில் நோட்டாவின் வாக்கு சதவீதம் இதுவரை சுமார் 1 சதவீதம் என்ற அளவுக்கே உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நோட்டாவுக்கு 35%க்கு மேல் வாக்குகள் கிடைத்தால், அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் செல்லாது, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல் வரும் என ஒரு தகவல் பரவி வருகிறது.
முடிவு
மேற்கண்ட தகவல் முற்றிலும் பொய்யானது. நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் நோட்டாவுக்கு அடுத்த இடத்தைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
ரேட்டிங்
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications