என்ன பொசுக்குனு படுத்துருச்சு.. தலைகால் புரியாமல் ஆடிய தங்கம்! சட்டென விலை சரிய காரணம் என்ன?
சென்னை: கடந்த சில வாரங்களில் சாதனை உயரத்தில் சென்றிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, வெள்ளிக்கிழமை திடீரென சரிந்தது. பல நாட்களாக நடந்த விலை உயர்வுக்கு பின்னர், பங்கு மற்றும் பொருள் சந்தைகளில் லாபப் பதிவு (Profit Booking) நடைமுறையில் தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளதால், திருமணங்கள் மற்றும் பண்டிகை போன்றவற்றுக்காக தங்கம் வாங்க தயாராகி வரும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை எப்போதும் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் தங்கமும் வெள்ளியும் விலைகளில் ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பெருமளவில் மதிப்புள்ள உலோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கம் விலை
இந்நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்கத்தின் விலை திடீரென சரிந்தது. மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தளத்தில் 24 காரட் தங்கம், சமீபத்தில் பத்து கிராமுக்கு ₹1,32,294 என்ற சாதனை உயரத்தை எட்டியிருந்தது. ஆனால் தற்போது அது சுமார் 3 சதவீதம் குறைந்து ₹1,25,957 ஆக சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலை மேலும் கடுமையாக சரிந்து, ஒரு கிலோவுக்கு ₹1,70,415 இலிருந்து ₹1,53,929 வரை குறைந்துள்ளது. இது 8 சதவீதத்திற்கும் அதிகமான சரிவாகும்.
தங்கம் சந்தை
சந்தை நிபுணர்கள் இந்த விலை சரிவை "சாதாரண திருத்தம்" (Healthy Correction) எனக் குறிப்பிடுகின்றனர். அண்மையில் ஏற்பட்ட பெரும் விலை உயர்வுக்குப் பிறகு இது ஒரு இயல்பான ஓய்வு எனவும் அவர்கள் கூறுகின்றனர். வங்கித்துறை மற்றும் சந்தை நிபுணர் அஜய் பாகா கூறுகையில், "கடந்த சில மாதங்களில் தங்கம், வெள்ளி விலை வரலாற்று சாதனையாக விலை உயர்ந்தது. அதன் பின்னர், இன்று ஏற்பட்ட விலை சரிவு ஒரு 'தந்திர ரீதியான பின்னடைவு' எனலாம்," என்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு விதிக்கப்படும் அதிக வரிகள் குறித்து சமாதானமான நிலைப்பாட்டை எடுத்தது, உலகளாவிய பதட்டத்தை குறைத்ததாகவும் அதுவே இந்த விலை சரிவுக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் "தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான நீண்டகால முதலீட்டு அடித்தளம் இன்னும் வலுவாகவே உள்ளது. உலகளாவிய 'டாலர் பின்வாங்கும் போக்கு', மத்திய வங்கிகளின் தங்கம் சேர்த்தல், வெள்ளி உற்பத்தியில் காணப்படும் பற்றாக்குறை, மற்றும் குறைந்த வட்டி விகித சூழல் ஆகியவை இன்னும் தங்கத்துக்கு ஆதரவாக உள்ளன," என்றார்.
சரிவுக்கு காரணம்
கேடியா கமோடிட்டிஸ் நிறுவனர் அஜய் கேடியா தெரிவித்ததாவது: "கடந்த இரண்டு மாதங்களில் தங்கம் விலை ஒரு பக்கமாகவே உயர்ந்து வந்தது. அந்த பெரும் ஏற்றத்துக்குப் பிறகு இந்த சரிவு தவிர்க்க முடியாதது. அமெரிக்கா-சீனா மற்றும் அமெரிக்கா-ரஷ்யா இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளும் சந்தையில் நம்பிக்கையை அதிகரித்ததால், தற்காலிக சரிவு ஏற்பட்டது," எனக் கூறினார்.
முக்கிய வீழ்ச்சி
அவர் மேலும், "இந்த விலை சரிவு காரணமாக தங்க சந்தை முழுமையாக கீழே போய்விட்டது என்று பொருள் இல்லை. இது கடந்த எட்டு வாரங்களில் ஏற்பட்ட முதல் முக்கிய வீழ்ச்சி. அடுத்த வாரம் முக்கியமானதாக இருக்கும்," என்றார். தற்போதைய சரிவின்போதும், இரு நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளியின் நீண்டகால முன்னேற்றம் உறுதியாகவே இருப்பதாகக் கூறியுள்ளனர். தற்போதைய வீழ்ச்சி, ஒரு இயல்பான சந்தை சுழற்சியின் ஓர் அங்கமேயாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications