தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 2000 உயர்வு...காலையில் போனவர்களுக்கு மாலையில் ட்விஸ்ட்
சென்னை: தங்கம் விலை யாருமே கணிக்கவே முடியாத அளவிற்கு பெரிய அளவில் சரிந்துள்ளது. ஒரே நாளில் நேற்று 3000 ரூபாய் சரிந்தது. இதனால் தங்கம் விலை ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் சட்டென சரிந்து வருவதற்கு முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை விற்றது காரணமாக பார்க்கப்பட்டது. இன்று அக்டோபர் 29ம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்துஏறியபடியே இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏறத்தொடங்கிய தங்கம் விலை, படிப்படியாக உயர்ந்து வந்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 17-ந் தேதி யாருமே எதிர்பார்க்காத உச்சத்தை சந்தித்தது. அன்று ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் தங்க நகை விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக உயர்ந்து வந்தது.

ஒரு பவுன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்று வியாபாரிகள் கணித்தனர். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடனான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவருவதில் தொடங்கி, சீனா உடனான வர்த்தக போரையும் சுமூகமாக தீர்க்க முயன்றனார். இதனால் பழைய படி டாலர் மதிப்பு வலுவடைய தொடங்கியது. அதன்பின்னர் தங்கம் விலை அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரிந்து வருகிறது.
கடந்த அக்டோபர் 22-ந் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் குறைந்து ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கு வந்தது. அதனைத்தொடர்ந்தும் விலை மேலும் சரிந்து கொண்டே இருந்தது. தங்கம் விலை ஏறும் போது எப்படி ஒரு நாளில் இரண்டு முறை ஏறியதோ, அதுபோல் சரிவை சந்திக்கும் தற்போதும், த 2 முறை சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், பவுனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.
இதன்மூலம் நேற்று முன்தினம் விலையை காட்டிலும், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.375-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு பவுன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் சென்னையில் விற்பனை ஆனது. தங்கம் விலை கடுமையானசரிந்ததை கேள்விப்பட்ட மக்கள் நேற்று நகைக்கடைகளில் நகை வாங்க அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் நகைக்கடைகளில் நேற்று பரவலாக கூட்டம் காணப்பட்டது.
தங்கம் விலையை பொறுத்தவரையில் கடந்த 11 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,125-ம், பவுனுக்கு ரூ.9 ஆயிரமும் சரிந்துள்ளது. வெள்ளி விலையும் பெருமளவில் சரிந்துள்ளது. கடந்த 24-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 25, 26, 27-ந் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை அக்டோபர் 29ம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் நேற்று போல் சரிய வாய்ப்பு இல்லை என்றும், விலை உயரவே அதிக வாய்ப்பு உள்ளது வியாபாரிகள் கூறியிருந்தார்கள். அதன்படியே தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவனுக்கு 2000 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 11,325 ரூபாய் உயர்ந்து 11,210 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரை அக்டோபர் 29ம் தேதியான இன்று ஒரு ரூபாய் கூடி, ஒரு கிராம் 166 ரூபாய் ஆக விற்பனையானது. வெள்ளி ஒரு கிலோ 166,000 ஆக விற்பனையானது,












Click it and Unblock the Notifications