Gold Rate today: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. தங்கம் விலை சட்டென சரிவு.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் புதுப்புது உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை (Gold Rate) இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து இதுவரை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,120-க்கு விற்பனை ஆனது. இதனால் கனவில் தான் நகையை வாங்க முடியுமோ என நகை பிரியர்கள் கலக்கமடைந்தனர். இன்று சற்று விலை குறைந்துள்ளது அவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

தங்கம் விலை இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.84,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price Chennai gold

உச்சம் தொடும் தங்கம் விலை

தங்கம் விலை நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை ஆகி வந்தது. நாட்கள் செல்ல செல்ல... தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 9 மாதங்களுக்குள் தங்கம் விலையானது ஒரே அடியாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.

அதாவது கிட்டத்தட்ட 28 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. வரலாற்றில் இதுவரை தங்கம் விலை அதிகரித்தது இல்லை. நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தினமும் இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து விட்டது.

தங்கம் விலை குறைந்தது

இதன் மூலமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.85,120-க்கு விற்பனை ஆனது. இதனால் இனி தங்கத்தை கனவில் தான் நினைத்து பார்க்க முடியும் என ஏழை, எளிய மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தங்கம் விலை சற்று குறைந்து நிம்மதி அளித்துள்ளது.

இன்றைய ரேட் என்ன

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.320 குறைந்துள்ளது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை இன்று ரூ.84,800-க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து இன்று ரூ.10,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி 1 கிராம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலை உயர்ந்துகொண்டே சென்ற நிலையில் இன்று சற்று குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

24.09.2025 - ஒரு சவரன் ரூ.84,880
23.09.2025 - ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 - ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+