Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு.. சவரன் ரூ.71,520க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரங்களில் சில நாட்கள் தங்கம் விலை குறைய தொடங்கிய நிலையில், இந்த வாரத்தில் மீண்டும் உயரத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price gold

தங்கம் விலை உயர்வு

இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்களின் முதல் சேமிப்பு, முதலீடு என்று தங்கத்தை மட்டுமே சொல்ல முடியும். எந்த வகையான அவசரமாக இருந்தாலும் தங்கத்தை அடமானம் வைத்து பணம் திரட்டி கொள்ளலாம் என்பதால், மக்கள் நம்பிக்கையுடன் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் நடப்பாண்டில் தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ரெசிப்ரோக்கல் வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு பின் உள்ளன. கடந்த மாதம் மட்டும் தங்கல் விலை கிராமிற்கு ரூ.9,000வரை சென்றிருந்தது. வார இறுதி நாட்களில் குறைந்தாலும், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

திருமண சீசன்

இன்னும் 2 வாரங்களில் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்க தொடங்கிவிடுவார்கள். இதனால் தங்கம் விலை குறைந்தால், மக்களிடையே கூடுதல் உற்சாகம் ஏற்படும். நேற்று தங்கம் விலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112க்கு விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520

22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040

10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+