Gold Rate Today: விலை குறைவுக்கு பிரேக்.. 2 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு?
சென்னை: கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அதற்கு பிறகு 37 நாட்கள் ஆகியும் பெரிய அளவில் உயராமல், ஒரு சவரன் ரூ.71 ஆயிரம் என்ற அளவில் இருந்து வருகிறது. நேற்றும், நேற்று முன் தினம் என அடுத்தடுத்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.71,160க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று திடீரென்று உயர்ந்தது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதே தங்கத்தை வாங்கியிருந்தால் இப்போது எந்த கவலையும் பட வேண்டாம் என்று பெரும்பாலானோர் நினைக்கும் அளவுக்கு தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒருவருக்கு வாழ்க்கையில் வருமானம் கூடுகிறதோ இல்லையோ.. தங்கத்தின் விலை மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில்..
ஏதோ ஓரிரு நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் ஒட்டு மொத்தமாக கணக்கில் எடுத்து பார்த்தால் விலை உயர்வே அதிகம் இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே ஒரு சவரன் தங்கம் அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஆண்டில் சராசரியாக 4 ஆயிரம் விலை அதிகரித்து இருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 44,500க்கும் அதற்கு அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதம் ரூ.58,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஓராண்டு இடைவெளியில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது என்று பேசப்பட்ட நிலையில் தற்போது நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலையானது 74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டை விட 16 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 2 நாட்களாக சரிவு
இப்படி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தாலும் ஒரு மாதம் முடிந்தும் தங்கம் விலையானது இன்னும் 71 ஆயிரத்தில் தான் இருந்து வருகிறது.
நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,160க்கும் ஒரு கிராம் ரூ.8,895க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் பெரிதாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் தங்கம் விலை குறைந்து இருந்தது.
இன்று விலையேற்றம்
இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை. இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன்தங்க நகை ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துரூ.8,920க்குவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. ஒரு கிராம் ரூ.111 க்குவிற்பனைசெய்யபப்ட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளை ரூ.1லட்சத்து 11 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
29.05.2025 - ஒரு சவரன் ரூ.71,160 (நேற்று)
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025 - ஒரு சவரன் ரூ.71,960
26.05.2025 - ஒரு சவரன் ரூ.71,600
25.05.2025 - ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025 - ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications