பாலியல் தொல்லை + ஜாதி சொல்லி திட்டுகிறார்.. கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி புகார்
கோவை: கோவை காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ஆசைக்கு இணங்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாதி ரீதியாக திட்டி கட்சியை விட்டு செல்லும்படி மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அந்த தவெக பெண் நிர்வாகி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ''நான் தவெகவில் காரமடை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றின் செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தவெகவில் முதல் மீட்டிங் நான் தான் செய்தேன். தேர்தல் முடிந்து ஒரு மாதம் இருக்கும். காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார். கூட்டம் முடிய தாமதமாகிவிட்டது.
அப்போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 'உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நான் பார்த்து கொள்கிறேன்' என்று கூறினார். இது தனிப்பட்ட இடத்தில் நடந்த விவகாரம். வீட்டிற்கு செல்ல லேட்டானதால் அவங்களை கொண்டு போய் விட சொன்னேன். அவர் தவறாக நடந்து கொண்டபோது நான் அதற்கு மறுத்துவிட்டேன். என்னிடம் தவறாக பேச வேண்டாம்.. பழக வேண்டாம் என்று கூறினேன்.
திரும்ப திரும்ப என்னிடம் தவறாக நடக்க முயன்றார். கட்சியில் நீங்கள் இருப்பது இடையூறாக இருப்பதாக என்னிடம் கூறினார். நான் கட்சிக்கு இரண்டு ஆண்டுக்கு மேல் உழைத்து உள்ளேன் என்று கூறி தொடர்ந்து பணியாற்றினேன். இதனால் ஏதாவது ஒரு வழியில் திரும்ப திரும்ப எனக்கு தொல்லை அளித்தார். ஜாதியை சொல்லி திட்டி மிரட்டுவார். குறிப்பிட்ட ஜாதியில் உள்ளவர்களிடம் வேலை வாங்கிவிட்டு அவர்களிடம் பணம் இல்லை என ஒதுக்குவார். இதுபற்றி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளரிடம் கூறியுள்ளேன். அவர்களுக்கு தெரியும். காரமடை ஒன்றிய செயலாளர் எனக்கு நிறைய பிரச்சனைகளை கொடுத்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
