என்விடியா CEOக்கு மாற்று.. இவர் ஒருவர்தான்! டொனால்ட் டிரம்ப் சொன்ன நபர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அப்பதவிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ டிம் குக்கை நியமிக்க வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட, இருவருடனான தனிப்பட்ட உறவுகள் குறித்த சர்ச்சை மற்றும் தேசிய பாதுகாப்பு கவலைகள் எழுந்ததால் ஹுவாங் பதவி விலகியுள்ளார். இதையடுத்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, கோலெட் கிரெஸ் தற்காலிக சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Nvidia

இப்படி இருக்கையில்தான் டிரம்ப், டிம் குக் பெயரை பரிந்துரைத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. "சிறப்பாக பணியாற்றிய ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் மட்டுமே பொருத்தமானவர். ஒரு ஜாம்பவானுக்கு பதிலாக மற்றொரு ஜாம்பவான் வர வேண்டும்" என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓவாக 15 ஆண்டுகள் பணியாற்றிய டிம் குக், கடந்த செப்டம்பர் மாதம் அப்பதவியிலிருந்து விலகி தற்போது அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக உள்ளார். என்விடியா பொறுப்பை ஏற்பதில் டிம் குக்கிற்கு விருப்பம் உள்ளதா? என்பது குறித்து டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த 1993ம் ஆண்டு என்விடியாவை இணைந்து நிறுவிய ஜென்சன், திருமணத்திற்கு அப்பாற்பட்ட இரு உறவுகளில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதில் ஒருவர், சீன அரசுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் சீன பெண் தொழிலதிபர் ஆவார். அமெரிக்க மற்றும் சீனா இடையே நவீன சிப் தொழில்நுட்பம் தொடர்பாக பதற்றம் நிலவி வரும் இந்த சூழலில், என்விடியாவின் ரகசிய தகவல்களை சீன உளவுத்துறை பெற முயன்றிருக்கலாம் என்ற தேசிய பாதுகாப்பு கவலைகள் எழுந்த என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+