மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பை பை! இஸ்ரேலின் உளவு செயலிக்காக.. கொள்கையை அட்ஜஸ்ட் செய்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேலிடமிருந்து 'செலிபிரைட்' எனப்படும் உளவு சாப்ட்வேரை வாங்க, இந்தியா தனது மேக் இன் இந்தியா கொள்ளையை விட்டுக்கொடுத்திருப்பதாக இன்டெர்நெட் ஃபிரீடம் ஃபவுண்டேஷன் (IFF) ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அல்ஜசீரா ஊடகம் செய்தியை தெரிவித்திருக்கிறது.

பெகாசஸ் போல, இந்த 'செலிபிரைட்' சாப்ட்வேரும் ரொம்பவும் ஆபத்தானதாகும். இதனை வைத்து போன் லாக் செய்திருந்தாலும் கூட.. அதிலிருந்து மிக முக்கியமான தகவல்களை அப்படியே உருவிவிட முடியும்.

India Waives Make in India Rules

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மத்திய பாஜக அரசு மட்டுமின்றி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலும் இந்த சாப்ட்வேரை அரசு வாங்கியிருக்கிறது என்பதுதான்.

இதை வாங்குவதற்காக மத்திய அரசு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'மேக் இன் இந்தியா' விதிகளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்கும் உத்தரவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 7ம் தேதி கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் 422 வெளிநாட்டு தடயவியல் கருவிகளை வாங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஜன.20ம் தேதியிட்ட மற்றொரு கடிதத்தின்படி, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சுமார் ரூ.5 கோடி செலவில் இஸ்ரேலின் செலிபிரைட் பிரீமியம் டூலை, 3 ஆண்டு உரிமத்துடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பெரிய டேப்லெட் அல்லது பெரிய சூட்கேசில் பொருத்தப்பட்ட லேப்டாப் போல இருக்கும். இதை சாதாரண நபர்களால் வாங்க முடியாது. அரசு, ராணுவம், உளவுத்துறை, காவல்துறையால் மட்டுமே இதை வாங்குவது சாத்தியமாகும்.

இந்த டூலை இமாச்சலப் பிரதேச அரசு, கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் வாங்கியிரு்கின்றன. இதை வைத்து ஆப்பிள், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆகிய OSகளின் பாஸ்வோர்டுகளை உடைத்து நீக்கப்பட்ட கோப்புகள் மற்றும் பிரவுசிங் இஸ்டிரியை மீட்க முடியும். பெகாசஸ் போல தொலை தூரத்தில் இல்லாமல், போனை கேபிள் மூலம் மட்டுமே இந்த டூலை வைத்து ஹேக் செய்ய முடியும். சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றிருந்த துருவ் ராதே, காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரது ஆப்பிள் ஐபோனை செலிபிரைட் டூல் மூலம் ஹேக் செய்ய முயற்சி நடந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+