‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு?
ஜம்மு காஷ்மீர்: காலநிலை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுங்கை லே பகுதிக்குள் நடமாட 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது வீட்டு காவலில் வைத்துள்ளதாக சோனம் வாங்சுக் நள்ளிரவில் திடீரென்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

காலநிலை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமாக இருப்பவர் சோனம் வாங்சுக். தற்போது லடாக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் ஹில் கவுன்சில் தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு சோனம் வாங்சுக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் லடாக் எம்பி முகமது ஹனிபா, எல்ஏபி இணை தலைவர் செர்ரிங் டோர்ஜெய் மற்றும் கேடிஏ கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டம் நடத்தி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
குளிர்காலம் தொடங்கி உள்ளதால் இந்த தேர்தலை தள்ளிவைக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போராட்ட களத்தில் இருந்து சோனம் வாங்சுக்கை போலீசார் அழைத்து சென்றனர். அதுமட்டுமின்றி லே பகுதியில் சோனம் வாங்சுக் நடமாட 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் சோனம் வாங்சுக்கால் 60 நாட்கள் லே பகுதியில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என எதையும் செய்ய முடியாது. இதற்கான உத்தரவை லே மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் பிறப்பித்தார்.
சோனம் வாங்சுக் போராட்டத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்று போலீசார் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று நள்ளிரவில் சோனம் வாங்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
''என்னை வீட்டு காவலில் வைத்துள்ளனர். வீட்டில் இருக்கும்படி எனக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால் டஜன் கணக்கில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் என்னுடைய வீட்டை சூழ்ந்துள்ளனர். நான் கேட்ட கேள்விகளால் தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
I AM UNDER HOUSE ARREST Dozens of armed guards surround my house while the government version says 'I have been advised to stay at home'. All for asking uncomfortable questions like... why is the Judicial Enquiry Commission Report (of last year's killings in Leh) is delayed & a phoney Council election is foisted on people with rocket speed in mid winter. Whole of Ladakh is in protest. My X, Instagram & YouTube reach have been drastically suppressed in the world's largest democracy. Please help share this message...
— Sonam Wangchuk (@Wangchuk66) November 12, 2026
லே பகுதியில் கடந்த ஆண்டு நடந்த படுகொலைகள் குறித்த நீதித்துறை விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஏன் தாமதமாகிறது? குளிர்காலத்தின் உச்சத்தில் போனி கவுன்சில் தேர்தலை ஏன் மக்கள் மீது மிக அவசரமாக திணிக்கிறீர்கள்? என்ற கேள்விகளை கேட்டதால் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
இப்போது முழு லடாக்கும் போராட்டக்களமாக மாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், எனது எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகும் பதிவுகள் அதிகமானவர்களின் பார்வைக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்'' என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
