பூந்திக்கொட்டை.. தலைமுடி கொட்டுதா? அப்ப இது ட்ரை பண்ணலாமே.. பெஸ்ட் எண்ணெய்.. முடி கருகருன்னு வளரும்
சென்னை: தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறதா? நம் முன்னோர்கள் பயன்படுத்தி, அபரிமிதமாக பலன்பெற்ற, சித்த மருந்துகளை பயன்படுத்தினாலே, முடி உதிர்வது கட்டுக்குள் வரும். ஒருசில டிப்ஸ்களை பார்ப்போம்.
நம்முடைய தலைமுடி ஆரோக்கியத்துக்கும், நாம் உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. நம்முடைய உடலில் ஹார்மோன்கள் சீராக இருந்தாலே, தலைமுடியும் ஆரோக்கியமாக காணப்படும்..

முக்கியமாக, இரும்புச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.. ஜிங்க் சத்து குறைவாக இருந்தால், தலைமுடி உடைந்த நிலைமையில் அதாவது வலுவாக இல்லாமல் இருக்கும். அதேபோல, புரோட்டீன் குறைவாக இருந்தால், தலைமுடியின் செல்களின் வளர்ச்சியை பாதிக்கும்.. வைட்டமின் D குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சியை தடைப்படுத்திவிடும்.
இரும்புச்சத்து: அதனால்தான், இரும்புச்சத்து, கால்சியம் என ஒவ்வொரு சத்துக்களும் நம்முடைய உணவில் இருப்பதுபோல் பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது. வைட்டமின் C, B, E சத்துக்களையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
காரணம், வைட்டமின் C சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, கொலாஜன் உற்பத்திக்கு தூண்டுகோலாக அமைகிறது.. வைட்டமின் B நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.. வைட்டமின் E நிறைந்த உணவை உட்கொள்ளும்போது, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்தலையும் குறைக்கிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன.
சித்த மருந்துகள்: இதுபோன்று உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவதைபோலவே, தலைமுடி பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சித்த மருந்துகள் நமக்கு கை கொடுக்கின்றனு. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டும் தலைமுடி ஆரோக்கியத்தை பேணலாம்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக சேர்த்து இரவில் தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில், இந்த கலவையில், எலுமிச்சம் பழச்சாறு சிறிது கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடிஉதிர்வது நிற்க துவங்கும்.. அல்லது வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பவுடர் செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.
தாமரை இலைகள்: அதேபோல, தாமரை இலையை சூடாக்கி, அதிலிருந்து சாறு மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த சாற்றையும் அதில் கலந்து கொட்டி சூடுபடுத்த வேண்டும். 3 நிமிடத்தில் இதை அடுப்பிலிருந்து இறக்கிவைத்துவிட வேண்டும். ஒருநாள் முழுக்க விட்டு, மறுநாள் எண்ணெய்யை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்து கொண்டு பயன்படுத்தலாம்.
வெந்தயம், பூந்திக்காய் இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக் கொண்டு, அதனுடன் செம்பருத்தி இலைகள் 10 கிராம் சேர்த்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.. வாரம் 2 முறை இந்த பவுடரை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது குறைய துவங்குவதுடன், தலைமுடியும் மின்னும்.
கீரைகள்: அல்லது, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை இந்த 4 கீரைகளையும் சுத்தம் செய்து, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.. இந்த விழுதை, 1 கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப், பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அப்படியே ஒருநாள் விட்டுவிட்டு, மறுநாள் பார்த்தால், விழுதுகள் கீழே தங்கி, வெறும் எண்ணெய் மட்டும் மிதக்கும். இந்த எண்ணெய்யை வாரம் 2 நாள் தலையில் தேய்த்து குடித்து வந்தாலும் தலைமுடி உதிர்வு நின்றுவிடும்.
அல்லது அவுரி இலைகள், கரிசலாங்கண்ணி இலைகள், கறிவேப்பிலை இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் 3 வேளை 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் வந்தாலும் தலைமுடி உதிர்ந்து, முடி நன்றாக வளர தொடங்கும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications