அரை கீரையின் அருமையும், அற்புதமான பலன்களும்!
சென்னை: கீரை வகையில் இது குட்டையாக, கனத்த வேரில் பல கிளைகளை விட்டு, அரையடி முதல் ஒரு அடி உயரம் வரை புதர் போல் வளரும். கிளைகளை ஒடித்து கீரை சேகரிப்பார்கள். கிளைகளை எடுக்க எடுக்க மறுபடியும் கிளைகள் வளரும். ஒரு முறை பயிரிட்டால் பல மாதங்கள் வரை நல்ல பலன் தரும். இந்த கீரை காய்ச்சல், குளிர், கபம் என பல நோய் தீர்க்கும் நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது . மேலும் இக்கீரையில் தோசை, சூப், கீரைவடை, கீரை மசியல், கூட்டு பல வகையாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம், பல விதமான வியாதிகளை குணப்படுத்தக்கூடிய சக்தி இதில் உள்ளது. எந்த வியாதியஸ்தரும் அரை கீரை பயமின்றி சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டுவந்தால் உடலில் உஷ்ணம் அதிகம் உண்டாகும்.

புது தம்பதியருக்கு சிறந்த டானிக்
கணவன் மனைவி கட்டாயம் சாப்பிட வேண்டும். வாலிப வயதில் திருமணம் செய்துகொண்டவர்கள், இருவரும் அரைக்கீரை சாப்பிட்டால் குடும்ப இல்லற விஷயத்தில் இன்பம் பெறலாம். அரைக்கீரையுடன் வெங்காயம், நெய்யில் பொரித்து, அல்லது கீரையை கடைந்து சாப்பிட்டுவந்தால், உடலில் இரத்த சோகை நீங்கி, புதிய இரத்தமும் உற்பத்தியாகும். இந்த கீரை இரத்தத்தில் புதிய தாது அணுக்களை அதிகரிக்க செய்யும். உடலில் இந்த தாது அதிகம் இருந்தால், தாம்பத்திய உறவில் நீடித்த இன்பம் கொடுக்கும். அநேகர் இது பற்றி தெரியாமல், மருந்துகளை சாப்பிடுகிறார்கள், எனவே இந்த கீரையின் முக்கியத்துவம் அறிந்து, இருவரும் சாப்பிட்டு வரலாம்.

நரம்பு தளர்ச்சி குணமாகும்
இன்று அநேக வாலிபர்கள் தங்கள் வாலிப வயதில் சில தவறான பழக்கத்தினால் விந்தனுவை வெளியேற்றிவிடுகிறார்கள். ஒரு முறை பழக்கம், அடிக்கடி இப்பழக்கத்திற்கு அடிமையாகி, விடமுடியாமல், அனாவசியமாக அவர்களுடைய உடல் பலம் குறைந்து, நரம்பு தளர்ச்சி, சோம்பல், கண் பார்வை மங்கும் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக தங்கள் திருமணத்திற்கு பிறகு தாம்பத்திய உறவில் சரியான முறையில் இன்பத்தை அனுபவிக்க முடியாது. சேர்ந்தவுடனே விந்து வெளியேறிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாலிபர்கள் அல்லது திருமணமானவர்கள், தினமும் அரைக்கீரையை சாப்பிட்டுவந்தால், உடல் பலம் பெற்று, இந்த நிலை படிப்படியாக மாறிவிடும்.

உடல் மெலிந்தவர்கள் பலம் பெற, பருமனாக
இயற்கையாகவே உடல் மெலிந்தவர்கள், சில வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக இருப்பார்கள். அவர்கள் உடல் நலம் தேற சுலபமான வழியில் உடல் பலம் ஏற்ற தினசரி இக்கீரையை நெய்யுடன் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், சீக்கிரத்தில் உடல் எடையும் கூடும், அதிக பலத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

வாயுவை போக்க
ஒரு சிலருக்கு வாயு அதிக அளவில் உற்பத்தியாகி இரத்தத்துடன் கலந்துவிடும், இதனால் பல நாள் வைத்தியத்திலும், எந்த ஒரு பலனும் கிடைக்காது. அவர்களுக்கு வாயு தொல்லை தொடர்ந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக நெஞ்சுவலி, வயிற்று வலி, வயிற்று பொருமல், கைகால் வலி, மூட்டுகளில் வலி நாள் முழுவதும் இருக்கும். இந்த தொல்லை நீங்க அரைக்கீரையுடன் வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் சேர்த்து கடைந்து சத்தத்துடன் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் இருந்து வாயுவை பிரித்து, வெளியற்றி , நாளடைவில் வாயு ஏற்படாது. முற்றிலும் நின்றுவிடும்.

பிரசவித்த பெண்களுக்கு பலம் கிடைக்க, தாய்ப்பால் சுரக்க
பிரசவத்திற்குப்பிறகு உடல் பலம் பெற, ஆகாரம் கொடுக்க ஆரம்பித்த பிறகு, அரைக்கீரையை உணவில் சாப்பிட்டுவர பலம் கிடைக்கும், மேலும் தேவையான பால் சுரக்க ஆரம்பிக்கும். இந்த கீரையின் இலைகளை மட்டும் பொரித்து சாப்பிட்டுவந்தால், உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோய் தோற்று வராமல் பாதுகாத்து, சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

கண் கோளாறு, சளி, இருமல், பசிமந்தம் நீங்க
பொதுவாகவே எல்லா வகை கீரையில் இரும்பு சத்து இருப்பதால் கண்களுக்கு நல்லது, கண் சார்ந்த கோளாறுகளை சரிசெய்யும். அதிலும் அரைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை மங்கல், கண் குத்தல், போன்ற கோளாறுகள் நீங்கும். சளியோடு இரும்பல் இருந்தால், இக்கீரையை சாப்பிட்டால், சளி முறித்து இருமல் குணமாகும். பசியின்மை உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை அரைக்கீரை பொரித்தோ, கடைந்தோ உணவில் சாப்பிட்டால், பசியின்மை போக்கி, நல்ல பசியுணர்வை உண்டாகும். கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள் கீரையுடன் மிளகு, சீரகம், இரண்டையும் அரைத்து, புளிக்குழம்பு வைத்து சாப்பிட்டால், வலி நீங்கி, உடல் லேசாக இருக்கும்.

கல்லீரல், சிறுநீரகம்
கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு, உடல் குறைவால் இருப்பவர்கள், அரைக்கீரை உணவில் சேர்த்துவர, உடல் பலம் பெறும். உப்புத்தன்மை உள்ள உணவை அதிக சேர்த்துக்கொள்வதால், சிறுநீரகங்களில் உப்பு சேர்ந்து கற்கள் உருவாகும். இந்த கீரை சாப்பிட்டால், சிறுநீர் நன்கு பெருகி, உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications