கல்லீரல் காக்கும் நெல்லிக்காய்.. கல்லீரலை கிளீன் செய்து.. சிறப்பாக செயல்பட வைக்கும் 8 ஆரோக்கிய ஜூஸ்
சென்னை: நம்முடைய கல்லீரலின் ஆரோக்கியம் முழுமையாக காக்கப்பட வேண்டுமானால், உணவில் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும்.. அதேபோல, 8 வகையான பானங்களை குடிப்பதன்மூலமும் கல்லீரலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியும். எப்படி தெரியுமா?
நம் உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, பிரதான உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வது கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணிகளை செய்வதும் கல்லீரல்தான். புரதத்தை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதும் கல்லீரல்தான்.
ஆனால், கல்லீரலை 70% நோய்கள் பாதித்தபிறகே அதன் அறிகுறிகள் தெரியவரும். இது மிகப்பெரிய ஆபத்தை உண்டுபண்ணிவிடும். எனவே, கல்லீரலை எப்போதும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதுதான், கல்லீரலை காக்கும் ஒரே வழியாகும்.

முட்டைக்கோஸ்: திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள், மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, மற்றும் ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர் இவைகளை எல்லாம் எக்காரணம் கொண்டும் உணவிலிருந்து தவிர்க்கக்கூடாது. அந்தவகையில், கல்லீரலை காக்கும் 8 வகையான ஜூஸ்களை பற்றி பார்ப்போம்.
முதலில் செம்பருத்தி டீயை சொல்லலாம்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த செம்பருத்தி டீயை குடித்து வரும்போது, உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமனாகிறது.. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. செம்பருத்தி டீயில் ஹெபடோப்ரோடெக்டிவ் பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. அதனால், நச்சுகள் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலை செம்பருத்தி பாதுகாக்கிறது.
பூண்டு ஜாம்: அதேபோல, பூண்டு சாறு குடித்துவரலாம்.. ஒரு பாத்திரத்தில் சிறிது ஆலிவ் ஆயிலையும், தோலுரித்த பூண்டுகளை நன்றாக நசுக்கி, இடித்தும் சேர்த்து கொள்ள வேண்டும். இதில், எலுமிச்சம் சாறு கலந்து, ஜாம் போல தயாரித்து வைத்து கொள்ள வேண்டும். மதிய உணவுக்குப் பிறகோ அல்லது மாலை நேரத்தில் காபி, டீ குடிக்காமல் ஒரு ஸ்பூன் குடித்து வரலாம்.. இப்படி ஒரு வாரம் குடித்து வந்தாலே கல்லீரல் சுத்தமாகி, கொழுப்பு கல்லீரல் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.
அடுத்ததாக மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால், நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரலில் படிந்துள்ள நச்சுக்களை அகற்ற கூடும். குறிப்பாக உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் : நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.. அளவுக்கு அதிகமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த நெல்லிக்காய் சாற்றில், வைட்டமின் C நிறைந்துள்ளது.. இது நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பேருதவி செய்கிறது.. எனவே, சரியான அளவில் நெல்லிக்காய் சாறு எடுத்துக்கொள்வது முக்கியம்.. இதனால் கல்லீரலில் நச்சுக்கள் அண்டாது என்பதுடன், கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கப்படும்.
பீட்ரூட் ஜுஸ்களை தினமும் குடிக்கலாம்.. ஃபோலேட், பெக்டின், பீட்டாலைன்கள் மற்றும் பீடைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் இந்த பீட்ரூட்டில் நிறைந்துள்ளன.. அத்துடன், நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் C இருப்பதால், பித்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.. இதனால் உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை எளிதாக அகற்றவும் முடியும்.
கொத்தமல்லி ஜூஸ்: ஒரு கைப்பிடி கொத்தமல்லியை நீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பிறகு மிக்சியில் சேர்த்து, 4 பூண்டு பற்கள், சிறிது கல் உப்பு, தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல அரைக்க வேண்டும். இதில் எலுமிச்சம் சாறு கலந்து, வெறும் வயிற்றில் 3 நாட்கள் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள நச்சுக்கள், தொற்றுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
திராட்சைப்பழத்திலும் நிறைய நார்ச்சத்து உள்ளதால், கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.. திராட்சையில் உள்ள நாரின்ஜெனின் (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க செய்கிறது.. முள்ளங்கியிலும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.
காபி குடிக்கலா: சரியான அளவில் காபி குடித்து வருவதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.. கல்லீரலில் கொழுப்பு படிவதை குறைப்பதுடன், ஆன்ட்டி ஆக்சிடென்ட் உற்பத்தியையும் காபி அதிகரிக்க செய்கிறதாம்.. இதில் கிரீன் டீயையும் சேர்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications