சர்க்கரை நோயாளிகள் மூங்கில் அரிசியை சாப்பிடலாமா? மாதவிடாய் தொந்தரவை சரி செய்யும் மூங்கில் அரிசி மகிமை
சென்னை: மூங்கில் அரிசியை போன்ற சிறந்த சத்துக்கள் நிறைந்த அரிசியை காண முடியாது.. பழங்குடி மக்களின் முக்கிய உணவாக கருதப்படும் இந்த மூங்கில் அரிசி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? நீரிழிவு நோயாளிகள், இந்த அரிசியை சாப்பிடலாமா? பற்கள், எலும்புகள் வலுப்பெற உதவும் மூங்கில் அரிசியின் பிற நன்மைகள் என்னென்ன? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் பச்சை நிறமுடைய மூங்கில் அரிசியானது, வாசனை நிறைந்ததாகவும், தித்திப்பு சுவையுடனும் இருக்கும்.. கிட்டத்தட்ட கோதுமையை போலவே ருசி இருக்கும். பொதுமக்களிடம் அதிக மவுசு உள்ள மூங்கில் அரிசி சற்று காஸ்ட்லியானதாகும்.

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் உள்ளிட்ட சத்துக்கள் மூங்கில் அரிசியில் உள்ளது. எனினும், கொழுப்பு இல்லாத அரிசியாகும்.. வெறும் 1 கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் நிறைந்துள்ளதால் வெயிட் லாஸுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்..
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோளிகள் இந்த அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம். உடலின் சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்கிறது.. சர்க்கரை நோயாளிகள் மூங்கில் அரிசியில் காய்கறி சூப் செய்து சாப்பிடும்போது, கூடுதல் பலம் பெற முடியும். அதாவது மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வைத்து, வழக்கமாக சோறு வடிப்பது போலவே வடித்து, அந்த கஞ்சியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் காய்கறிகளை போட்டு சூப் வைத்து குடிக்கலாம்.. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு என்றாலும், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது ஆரோக்கியமானது.
அதேபோல, உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தால், இந்த அரிசியை பயன்படுத்தலாம். சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும், பலவீனமான எலும்பு உள்ளவர்களும் இந்த அரிசியை சாப்பிடலாம். ஏனென்றால், வைட்டமின் B6 இந்த அரிசியில் உள்ளதால் எலும்புகள், பற்களுக்கு வலுவாகிறது.. பற்களில் சிதைவு, பற்களில் துவாரம் போன்ற பிரச்சனைகளும் நெருங்காது என்பார்கள்..
கருப்பை - மாதவிடாய்
கருவுறுதலை மேம்படுத்துவதற்கும், பெண்களின் கருப்பைக்கு வலு தருவதற்கும் இந்த மூங்கில் அரிசி பெரிதும் உதவுகிறது.. மாதவிடாய் பிரச்சனைகளையும், கர்ப்பகால தொந்தரவுகளையும், போக்கும் இந்த அரிசி, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது..
ஆண்களுக்கு தாது விருத்தியடைய செய்யவும் இந்த அரிசி பயன்படுகிறது. அதேபோல, குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலும், இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மை பிரச்சனை விரைவில் நீங்குமாம்.
நரம்புகள் - பலம்
இந்த மூங்கில் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிரவுன் ரைஸ், மனஅமைதி மற்றும் மனநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் நிறைந்து காணப்படுகிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் என்றழைக்கப்படும் அந்த இரண்டு அத்தியாவசிய நரம்பியல் கடத்திகளும் மனநிலையை மேம்படுத்தவும், அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.
குரங்கு, யானை, காட்டு விலங்குகளுக்கு பிடித்தமான மூங்கில் அரிசியை, மன்னர் காலத்தில், படைவீரர்கள் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்துவார்களாம்.
பழங்குடியினர் - வருமானம்
உலகின் பல பகுதிகளில் பிரபலமாக இருக்கும் இந்த அரிசி வகை நம்முடைய இந்தியாவில், குறிப்பாக கேரள மாநில வயநாடு சரணாலயம் போன்ற பகுதிகளில் பழங்குடியின சமூகத்தினரால் அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. மேலும், இது போதுமான வருமானத்தையும் அவர்களுக்கு தந்து காத்து வருகிறது
மூங்கில் அரிசியில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் சுவாச பிரச்சனைகளை சமாளிக்க இது மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. இருமல் அல்லது சளி பிரச்சனை இருந்தால், மூங்கில் அரிசியை தாராளமாக சாப்பிடலாம். இதிலுள்ள பாஸ்பரஸ் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், ஆஸ்துமாவும் நாளடைவில் விலகிவிடுமாம்.












Click it and Unblock the Notifications