குப்பைமேனி ஸ்பெஷாலிட்டி.. வயிறு புண்களை ஆற்றும் சூப்பர் பழம்.. குடல் புண்ணை நீக்கும் ஜிலீர் டிப்ஸ்
சென்னை: வயிற்று புண்கள் ஏன் ஏற்படுகின்றன? இந்த குடல் புண்களை போக்க எளிமையான உணவுமுறைகள் உள்ளனவா?
குடல் புண்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.. பாக்டீரியா தொற்றுக்கள் காரணமாக, குடல் புண்கள் வரலாம்.. தவறான உணவுப்பழக்கங்கள், அல்லது சிலவகையான மருந்துகளை உட்கொள்வதாலும் குடல் புண்கள் வரலாம்.

காபி: காஃபின் கலந்துள்ள காபி போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வது, நிறைய காரம், நிறைய மசாலாக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் குடல் புண்கள் வரலாம்..
உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதிலுள்ள உட்சுவரில் ஏற்படும் புண்களையே, குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்... இதில், இரைப்பையில் ஏற்படுகின்ற புண்கள் என்றால், அதற்கு கேஸ்ட்ரிக் அல்சர் என்பார்கள்.. உணவுப்பாதையில் புண்கள் ஏற்பட்டால், அதற்கு ஈசோபேகல் அல்சர் என்பார்கள்.. சிறுகுடலின் முன்பகுதியில் புண்கள் ஏற்பட்டால், அதற்கு டியோடனல் அல்சர் என்பார்கள்.
குடல் புண்கள்: இதுபோன்ற குடல் புண் பிரச்சனைகளை முறையான உணவுப்பழக்கம் மூலம் முன்கூட்டியே தவிர்க்கலாம்.. அல்லது ஆரம்ப கடட குடல் புண்களுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம். இதோ ஒரு சில டிப்ஸ்கள்.
பல்வேறு நோய்களை விரட்டியடிக்கக்கூடிய குப்பை மேனி செடி, இந்த குடல் புண் பிரச்சனைக்கு தீர்வாகிறது.. இந்த செடியின் வேரை இடித்து, அதிலிருந்து கஷாயம் போல காய்ச்ச வேண்டும், இதில், 30மில்லி தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலே, வயிற்றுள்ள நச்சுக்கள், புழுக்கள் வெளியேறிவிடும்..
அல்சர்: குடல் புண்களால் அவதிப்படுபவர்கள், சாப்பிடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு, 2 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும்.. 10 நாட்கள் தொடர்ந்து இப்படி சாப்பிட்டு வரும்போது, குடல்புண்கள் மெல்ல ஆறிவிடும்... அதேபோல, ஆலமரத்தின் பாலில், ஒரு ஸ்பூன் பால் கலந்து, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டாலே போதும்.. வயிற்றிலுள்ள புண்கள் ஆறும்.
காஃபின் கலந்த, காபி, சாக்லட், ஐஸ்கிரீம்களை தவிர்க்க வேண்டும்.. காரணம், காபியை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது, நோயின் தீவிரத்தையும் இன்னும் அதிகமாக்கிவிடுமாம்.. உணவில், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி போன்றவற்றின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.
பெருங்காயம்: அதற்கு பதிலாக, சமையலில் பெருங்காயத்தை நிறைய சேர்த்து கொள்ளலாம்.. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து கொண்டால் செரிமானம் சீராகும்.. செரிமானம் சீராக நடந்தாலே, குடல் ஆரோக்கியம் தழைக்கும்.
கீரைகளில் மணத்தக்காளி மிகவும் நல்லது.. இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கரைந்து பசும் நெய் விட்டு சாப்பிட்டு வந்தாலே, வயிற்று புண்கள் ஆறும்.. காய்கறிகளில் கேரட், பீட்ரூட், மற்றும் முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், பேரிக்காய், என நீர்க்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
பேரிக்காய்: இதில் பேரிக்காய் மிகவும் முக்கியமானது.. காரணம், இந்த பேரிக்காயில் ஃபிளாவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால், வயிற்று புண்களை அழிக்க செய்கிறது.. நார்ச்சத்தும் அதிகம் என்பதால், சிறுகுடல் புண்கள் விரைந்து ஆறும்.. தொடர்ந்து புண்கள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை, இந்த பேரிக்காய்களுக்கு உண்டு.
பேரிக்காய் போலவே, வாழைப்பழங்களும், வயிற்று அமிலத்தை குணப்படுத்துகின்றன.. அதேபோல, இது வெயில் காலம் என்பதால், நுங்கு, இளநீர் நீர்ச்சத்து உணவுகளையும் தவறவிடக்கூடாது.
தயிர், பால்: அதேபோல உணவில் நிறைய தயிர் சேர்த்து கொள்வதால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தயிர் தடுத்து நிறுத்திவிடும்.. அத்துடன், வயிற்றுப்புண்களும் மெல்ல ஆற துவங்கும். தயிர் போலவே, குளிர்ந்த பாலும் வயிற்று புண்களை போக்குகிறது.. அரை கப் குளிர்ந்த பாலில், சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து குடிக்கலாம்.. அல்லது குளிர்ந்த பாலில் சம அளவு தண்ணீர் கலந்தும் குடிக்கலாம்.. பசும்பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வந்தாலே, வயிற்று புண்கள் குணமாகும்.
அவல் மிகவும் நல்லது.. அவலில், சோம்பு சம அளவில் கலந்து பொடி செய்து, 20 கிராம் பொடியை 2 லிட்டர் தண்ணீரில் காலையில் கரைத்து குடித்து வந்தாலும் குடல் புண்கள் ஆறும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications