Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிரிட்ஜில் மாவு வெக்கறீங்களா? ஆப்பிள், மட்டன், சிக்கன் பிரிட்ஜ்ஜில் வைக்கலாமா? இது தெரியாமல் போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரிட்ஜ்ஜில் நாம் அறியாமலேயே சில பொருட்களை வைத்து பயன்படுத்துகிறோம்.. அந்தவகையில், சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைக்கலாமா? என்பது பலருக்கும் சந்தேகம். அதேபோல, எந்த பொருளை எத்தனை நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்திருக்கலாம் என்பதிலும் நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.. காரணம், கத்திரிக்காயை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை குறைந்துவிடும். அறையின் வெப்பநிலைதான் கத்திரிக்காயை வைக்க வேண்டும்.

Refrigerator Fridge Health

காய்கறிகள்: அதுபோல் பிற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. தனியாக வைப்பதுதான் நல்லது.. பூண்டை காற்றோட்டமான சூழலில் வைத்தால்தான், நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்..

கத்தரிக்காயை பிளாஸ்டிக் பையில் போட்டு 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். தக்காளி - வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம். ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். உருளைக்கிழங்கை பிரிட்ஜ்ஜூக்குள் வைத்தால், அதன் நிறம் மாறிவிடும். வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால், அழுகிவிடும்.

அதேபோல, முட்டைகளை எக்காரணம் கொண்டும் பிரிட்ஜூக்குள் வைக்கவே கூடாது.. முட்டைகளை போலவே, இறைச்சி வகைகளை எப்போதுமே சுத்தம் செய்து ஃப்ரீசரில் மட்டுமே வைக்க வேண்டும்... அதுவும், சில மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும். அதிகபட்சம் ஒருநாளுக்கு மேல் இறைச்சியை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

புரோட்டீன்:
வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடும்.. அத்துடன் அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சிலசமயம் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

அதேபோல, சமைத்து பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சியையும், நாட்கணக்கில் சூடு செய்து சாப்பிடக்கூடாது. இது நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமமாகும்... இறைச்சி, முட்டைகளை போலவே, கீரைகள் அல்லது காய்கறிகளையும் நாட்கணக்கில் வைக்கக்கூடாது.. பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருந்தாலும், அதில் நீர்ச்சத்து உட்பட அனைத்துமே காணாமல் போயிருக்கும். எனவே, இவைகளையும் குறிப்பிட்ட நேரம் வைத்திருக்க வேண்டும்.

வெண்ணெய்: வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் பிரிக்கப்படாமல் இருந்தால், 3 மாதங்கள்கூட ஃப்ரிட்ஜில் வைக்கலாம்... இட்லி, தோசை மாவு புளிக்க செய்துவிட்டு, அதற்கு பிறகே பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனால், 3 நாட்களுக்கு மேல் மாவு வைத்து பயன்படுத்தக்கூடாது.

அதேபோல, சப்பாத்தி மாவையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.. சப்பாத்தி மாவினை பிரிட்ஜில் வைத்தால், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் சேர்ந்துவிடுமாம். இந்த நச்சு பாக்டீரியாக்கள் உள்ள மாவினை, ஏற்கனவே நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்கள் சாப்பிடும்போது, அபாயத்தை தந்துவிடும்.. அமிலத்தன்மை, முதல் பக்கவாதம் வரை ஏற்படும் ஆபத்து உள்ளது. அப்படியே வேறுவழியின்றி வைக்க நேர்ந்தால், காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். அதுவும் 8 மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும்.

சப்பாத்தி மாவு: சப்பாத்தி மாவு என்றில்லை, எந்தவகை உணவாக இருந்தாலும்., காற்று புகாத வகையில் பிரிட்ஜில் வைத்தால், அதை ஓரளவு பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்..

ஆப்பிள் பழங்களை 2 வாரங்கள் வரை பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.. வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். திராட்சை பழத்தினை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். ஆரஞ்சு, கமலா, கிரேப் இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம். பைனாப்பிள் பழங்களை, நன்றாக பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.. தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம். எலுமிச்சை - இரண்டு வாரம் வரை வைக்கலாம்.

கொய்யா பழங்கள்: பேரிக்காய், சப்போட்டா, கொய்யா பழங்களை, பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து, அதற்கு பிறகே பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் பழங்களை 3 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+