"தூதுவளை" தூதுவன்.. தூதுவளையின் 20 அதிசயம்.. ஆஸ்துமாவே அலறி ஓடிரும்.. இந்த இலையை இப்படி சாப்பிடுங்க
சென்னை: ஆண்மை சக்தியை அதிகரித்து, உடலில் வலு பெற வேண்டுமானால், அதற்கு உறுதுணையாக இருப்பது தூதுவளை என்பதை மறுக்க முடியாது.
இது முழுக்க முழுக்க ஒரு மூலிகை செடியாகும். தூதுவளை செடியின் இலை, பூ, காய், வேர் எல்லாமே பயன்தரத்தக்கது. இதன் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது இந்த தூதுவளை..

காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது. பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...
அருமருந்து: தேள், பூரான், தேனி, வண்டுகள், பூச்சிகள் இப்படி விஷபூச்சிகள் கடித்துவிட்டால், இந்த தூதுவளை அவர்களின் உயிரை காப்பாற்றும்.. அவ்வளவு ஏன், பாம்பு கடித்தால்கூட, தூதுவளையின் பழம் அருமருந்தாக நின்று நம் உயிரை காப்பாற்றும்.. தூதுவளை இலை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு விஷ முறிவு ஏற்படும். அதனால்தான் பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாக சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.
ஆண்மை குறைபாடுகள்: ஆண்மை குறைபாடுகளை நீக்கி நரம்பு சம்பந்த பிரச்சனைகளையும் இந்த தூதுவளை நீக்குகிறது.. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை சிறந்த தீர்வாகும்... கண் எரிச்சல் நீங்குவதுடன், கண் வலி இருந்தாலும் சரியாகிவிடும்.. தூதுவளை பவுடர் என்றே நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கிறது..
தூதுவளை பூக்கள், மொட்டுக்கள் போன்றவற்றை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிடலாம்.. கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய்: இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது.. இதனை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.. தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையுமாம். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் அனுமதியுடன் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இந்த இலையை பறிக்கும்போது, அதை சுற்றிலும் முட்கள் இருக்கும். அதனால், இலைகளை மட்டும் ஜாக்ரதையாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.. இந்த இலையை நெய்யில் வதக்கி துவையலாகவும் சாப்பிடலாம்.. சட்னியாகவும் சாப்பிடலாம்.. பச்சடியாகவும் சாப்பிடலாம். அடை போலவும் செய்து சாப்பிடலாம்.. இந்த இலையில் ரசம் போலவும் வைக்கலாம்.

தூதுவளை சட்னி: ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, அதனுடன் சிறிது புளியையும் சேர்த்து தனியே எடுத்துக்கொள்ள வேண்டும்.. மீண்டும் அதே வாணலில் தூதுவளை இலையை சேர்த்து, லேசாக வதக்கி எடுத்து கொண்டு, அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்தால், தூதுவளை சட்னி ரெடி
சட்னி: சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெயில் கீரையை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு, புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கி, இப்போது ஏற்கனவே வதக்கி வைத்த கீரையை கொட்டி கிளறி துவையலாக அல்லது சட்னியாக அரைத்து கொள்ளலாம்.
துவையல்: தூதுவளையை முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து வேக வைக்கவும்.. இதில் சிறிது தேங்காய் துருவல், இஞ்சி, கல் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, வேக வைத்த கீரை மற்றும் பயிரை கலவையில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க வைத்து, தாளித்து விட வேண்டும். சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கும், நுரையீரல் ஆரோக்கியத்துக்கும் இது மிகவும் நல்லது.
இந்த இலையை சிறிது எடுத்து சுத்தம் செய்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து, சப்பாத்தி போல அல்லது தோசை போல ஊற்றி சாப்பிடலாம்.. இந்த இலையின் காய்கள், அதாவது தூதுவிளங்காயை பறித்து, மோரில் ஊற வைத்து, வற்றல் போல செய்து சாப்பிடலாம். அதாவது மோர் மிளகாய் வற்றல் போல சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications