பாகல் இலை.. வேப்பிலை போலவே சூப்பர் பலன் தரும் துளசியிலை.. ரத்த சுத்திகரிப்பை செய்யும் அற்புத மூலிகை
சென்னை: நம்முடைய ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால், உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நமக்கு வந்துவிடும்.. அந்தவகையில், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் விலகி, சுத்தம் செய்யக்கூடிய ஒருசில மூலிகை மற்றும் இலைகளை பார்ப்போம்..!
ரத்தம் அசுத்தமாவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. சுற்றுச்சூழல்கள், ஆரோக்கியமற்ற மற்றும் முறையற்ற உணவு பழக்கங்கள், அதிகமான வேலைப்பளு, உடல் பருமன், போதுமான அளவுக்கு தூக்கம் இல்லாதது, மன அழுத்தம், சிலவகை நோய்கள் போன்ற எத்தனையோ காரணங்களுக்காக ரத்தம் அசுத்தமாகலாம்.

அசுத்தங்கள்: ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம்.. சிலருக்கு தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல், தலைவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். ஆரம்ப கட்டத்திலேயே ரத்த சுத்திகரிப்புக்கு எளிய முறையில் தீர்வு காணலாம்..
பாகற்காய் இலைகள் இதற்கு உபயோகமாகின்றன.. பாகற்காயில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியம் இருப்பதால், நம்முடைய எலும்பு, பல் வளர்ச்சிக்கு பாகற்காய் பெரிதும் உதவுகிறது.. வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியம் இருப்பதால், நம்முடைய தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள்: அதனால்தான், நீரிழிவு நோயாளிகளை பாகற்காய் ஜூஸ் குடிக்க சொல்கிறார்கள். ஆரம்ப கட்ட, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பாகற்காய் இலையை கொதிக்க வைத்து சாறு சாப்பிடலாம். ஆனால், இந்த சாறு சாப்பிடுவதால், வேறு மருந்து எதையும் எடுக்கக்கூடாது..
பாகற்காய் இலையை கொதிக்க வைத்து, அதிலேயே சூப் தயாரித்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தாலும், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.. இதனால், ரத்தம் சுத்தமாகுவதுடன், குடல் பகுதியும் சுத்தமாகும்.
வேப்பிலைகள்: வேப்பிலைகளை எடுத்து கொண்டால், ரத்தத்தை சுத்திகரிப்பதில் பெரும்பங்கு உண்டு.. தினமும் நான்கைந்து வேப்ப இலைகளை பச்சையாக, வெறும் வயிற்றில் தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலும் ரத்தம் சுத்தமாகும்.. அதேபோல, வேப்ப இலைகளை ஒரு பாட்டில் தண்ணீரில், இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்தாலும் பலன்கிடைக்கும்.
முருங்கைக்கீரையை தவிர்த்துவிட்டு, எந்த விஷயத்தையும் பற்றியும் பேச முடியாது.. துவரம் பருப்பை வேகவைத்து, அதனுடன் சுத்தம் செய்யப்பட்ட முருங்கை கீரையையும் சேர்த்து, பொரியல் போல செய்து, முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கினால் பொரியல் ரெடி.. இதை நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே ரத்தம் விருத்தியாகும்.. முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, தந்தால், ரத்த சுத்தியும் நடைபெறும்..
துளசி இலை: அதேபோல, துளசியும் மிக முக்கியமான ரத்த சுத்திகரிப்பு இலையாகும்.. ரத்தம் மட்டுமல்லாமல், சிறுநீரகம், கல்லீரல் என பல்வேறு பாகங்களிலுள்ள உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை இந்த துளசிக்கு உண்டு.. அனைத்து கழிவுகளையும், நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறி செய்துவிடும்.. எனவே வெறும் துளசி இலைகளை 7, 8 மென்று சாப்பிட்டு வந்தாலே போதும்.. அல்லது துளசியில் டீ போட்டு குடித்து வந்தாலும், ரத்தம் புத்துணர்ச்சி பெறும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications