நொச்சி இலை.. சளி முதல் சைனஸ் வரை ஓட ஓட விரட்டும் கீரை..உச்சி முகர செய்யும் நொச்சி இலைகளின் அற்புதம்
சென்னை: கீரைகளில் எத்தனையோ வகைகள் உள்ளன.. ஆனால், ஒருசிலவற்றை மட்டுமே அன்றாட உணவில் பயன்படுத்துகிறோமே தவிர, மற்ற கீரைகளின் மகத்துவம் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. அதில் முக்கியமானது நொச்சி இலைகள் ஆகும்.
முருங்கை மரம், வாழைமரம், வேப்பமரம் போலவே, இந்த நொச்சி செடியும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.. அதாவது, இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை..

நுரையீரலின் பாதுகாவலன்: இந்தக்கீரையை "நுரையீரலின் பாதுகாவலன்" என்று சொல்லலாம். சுவாசப்பாதையை சீராக்குவதில் இந்த இலைகளுக்கு பெரும்பங்கு உண்டு.. காரணம், சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை போன்ற பிரச்சனைகளைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.
நீரை கொதிக்கவைத்து, இந்த இலைகளுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, நெஞ்சு சளி கரைய ஆரம்பித்துவிடும். அல்லது குளிக்கும் வெந்நீரில், வேப்பிலையை போலவே, இந்த இலையையும் சேர்த்து குளித்து வரலாம்.. கடும் தலைவலி இருந்தாலும்கூட, இந்த இலைகளை, எரித்து அதன் புகையை சுவாசித்தாலே, தலைவலியும், தலைபாரமும் சேர்த்து குணமாகும்..
நொச்சி இலைகள்: ஆஸ்துமாவைகூட இந்த இலைகள் விரட்டக்கூடியது.. மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை, நொச்சி இலைகளுடன் வைத்து மென்று தின்றாலே ஆஸ்துமா குணமாகும்..
சிலர் இந்த இலையின் சாற்றினை, தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள்.. அதாவது, நொச்சி இலையிலிருந்து சாறு எடுத்து, அதனை நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி, ஓரளவு சூட்டிலேயே அந்த எண்ணெய்யைக்கலவையை தலைக்கு குளித்து வந்தால், நரம்பு கோளாறுகளும், கழுத்து வலியும் நீங்கும்.
இடுப்பு வலி: உடல்வலி, தசைவலிகளுக்கு தீர்வு தருகிறது இந்த இலைகள்.. 2 கைப்பிடி நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் குளித்தாலே, உடல் அசதி நீங்கிவிடும்.. ஸ்பூன் நொச்சி இலைச்சாற்றில், 1 கிராம் மிளகுத்தூள், நெய் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டால், மூட்டுவலி முதல் இடுப்பு வலி வரை குணமாகும். மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்தாக இது திகழ்கிறது.. உடலில் வீக்கங்கள், புண்கள் இருந்தால், இந்த இலைகளை அரைத்து பூசினால் பலன்கிடைக்கும்.
கை, கால் முட்டி வலி இருந்தாலும்கூட, இந்த இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினாலே, அந்த வலிகள் மெல்ல குறைய துவங்கும். அதேபோல, தூக்கம் குறைபாடு உள்ளவர்கள், இந்த நொச்சி இலைகளை, தலையணை உறைக்குள் வைத்து படுத்தால், நிம்மதியான தூக்கம் வரும்..

இந்த நொச்சி இலைகளை, தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரில் பிரசவித்த தாய்மார்களை, குளிக்க வைப்பார்கள்.. இதனால், உடல்லி, அசதிகள் போன்ற குறைபாடுகள் நீங்கும்.. நரம்புகளுக்கும் வலுவேற்ற உதவும்.. இந்த இலைகள் மாதவிலக்கை தூண்டக்கூடியது.
மாதவிலக்கு பிரச்சனை: நொச்சி இலையுடன் வேப்பிலையும் சேர்த்து எரித்து புகை போட்டால், கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும்.. வயிற்றுப் புழுக்களை கொல்லக்கூடியது.. வயிற்றுப்புழுக்களை மட்டுமல்ல, பாம்பின் விஷத்தையும் முறிக்கக்கூடியது.. இந்த இலையின் சாறுகளை முகத்தில் தடவிவந்தால், பருக்கள், கொப்புளங்கள், அல்லது தேமல்கள் மறைந்துவிடும்.












Click it and Unblock the Notifications