பாமாயில்.. ரேஷனில் இந்த மாசம் வாங்கிட்டீங்களா? அப்ப உடனே இதை செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் வாங்கும் பாமாயிலை பலரும் பயன்படுத்துவதில்லை.. ஆனால், இதை முறைப்படி சுத்தப்படுத்தி, உபயோகப்படுத்தினால், பல நன்மைகள் கிடைக்கும்.
எண்ணெய் என்றாலே அதன் விலை அதிகம் என்றே மனதில் பதிந்துவிட்டது.. வழக்கமாக உடல்பருமனாக இருப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் அதிக கவனத்தை செலுத்துவார்கள்.

சில சமயங்களில் எண்ணெய்யை பயன்படுத்தாமலேயே சமையலை செய்பவர்களும் உண்டு. ஆனால், உண்மையை சொல்லப்போனால், எண்ணெயில் ஆரோக்கியமும் ஒளிந்து கொண்டிருக்கிறதாம்..
நன்மைகள்: இதில், ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் பாமாயில், மலிவு விலை என்பதால், பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தி வருகிறோம்.. இந்த பாமாயிலில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில், விட்டமின் ஏ, விட்டமின் ஈ அதிக அளவு காணப்படுகிறது.. மேலும், பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கிறது.. இதனால், கண் சார்ந்த பிரச்சினைகளை சீர்செய்து, தெளிவான பார்வை கிடைக்க உதவுகிறது.. அத்துடன் ரெட்டினா குறைபாட்டையும் சரி செய்கிறது..
இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன என்கிறார்கள்.. நம் உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்களை ஒழித்துவிடக்கூடியவை.. புற்றுநோய் செல்களையும் ஒழித்துவிடக்கூடியவை...
சரும பாதுகாப்பு: இதில், விட்டமின் ஈ நிரம்பி உள்ளதால், இளமையான சருமத்தையும், ஹார்மோன் சமநிலையையும் தரக்கூடியது.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதில் கொழுப்பு சத்துக்களும் அதிகம் கலந்துள்ளன.. அதனால்தான், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பாமாயிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும், தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும், பாமாயில் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அப்படியே பயன்படுத்தினால், திடீரென பாமாயிலை பயன்படுத்துபவர்களுக்கு, சில சமயம், வாந்தி, பேதி, மயக்கம் என உடல்நல பாதிப்பை தந்துவிடும்.. அதுமட்டுமல்ல, பாமாயிலில் சமைத்தால், உடலில் பித்தமும் அதிகரிக்கும்..
சுத்திகரித்து பயன்படுத்துவது? : அதனால், இந்த பித்தத்தை எடுத்துவிட்டு சமைத்தால், பெரிய அளவுக்கு கெடுதல் வராது... இந்த பித்தத்தை எப்படி எடுப்பது?
ஒரு அகலமான வாணலியில், ரேஷன் பாமாயிலை ஊற்றி லேசாக சூடு செய்ய வேண்டும்.. பாமாயில் புகை வரும் அளவிற்கு காய்ச்சாமல், மிதமான தீயில் விட வேண்டும். எண்ணெய் லேசாக சூடேறியதும், எலுமிச்சம் அளவு புளியை எடுத்து, அதற்குள் கல் உப்பை திணிக்க வேண்டும்.. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உப்புக்கல்லை, அந்த புளிக்குள் வைத்து வெளியே வராதவாறு திணித்து உருட்டிப்பிடிக்க வேண்டும்..
இப்போது, சிறிய அளவு இஞ்சி துண்டு தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.. எண்ணெய் லேசாக சூடேறியதும், புளி உருண்டை + இஞ்சி துண்டு இரண்டையும் சேர்த்துவிட வேண்டும்.. எண்ணெயில் புளி போடும்போதும், இஞ்சி போடும்போதும் பொறியும். அப்படியே ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
நுரை பொங்கும்: பாமாயிலில் உள்ள பித்தம் மொத்தத்தையும், இந்த பொருட்கள் உள்ளிழுத்து ஈர்த்து கொள்ளும்.. புளியின் நிறமே கருப்பாக மாறிவிடும். எண்ணெய் காய்ந்து நுரைபோல பொங்கும்.. சிறிது நேரத்தில் நுரைகள் அடங்கியதும், புளி, இஞ்சி இரண்டையும் வெளியே எடுத்துவிட வேண்டும்.. பிறகு பாமாயிலை நன்றாக குளிர்விக்க வேண்டும். இறுதியில், துணி வடிகட்டியால் வடிகட்டி, ஒரு பாட்டிலில் நிரப்பி பயன்படுத்தலாம்.. இதில் எந்த ஆபத்தும் இல்லை.. சத்துக்களும் வீணாகாது என்கிறார்கள்.
தற்போது, மத்திய அரசு பாமாயிலுக்கு மானியம் வழங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய்யை வழங்க சொல்லி கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications