ஒல்லி ஒல்லி உடம்பு வேணுமா.. அப்ப இந்த 5 மேட்டரையும் உடனே கையிலெடுங்க.. சடசடன்னு வெயிட் குறைஞ்சிரும்
சென்னை: உடல் எடையை குறைக்க நினைத்தால், தண்ணீரை தவிர வேறு பெஸ்ட் சாய்ஸ் இல்லை.. இந்த தண்ணீருடன் சில மூலிகை பொருட்களும் சேரும்போது, இதன் பலன் இரட்டிப்பாகிறது. அதில், ஒரு சிலவற்றை பார்ப்போம்.
உடை எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுப்பது, சீரக தண்ணீராகும்.. உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்கக்கூடிய சக்தி இந்த சீரகத்துக்கு உண்டு.. அதனால், டயட்டில் இருப்பவர்கள், தங்களது உணவில் சீரகத்தை சேர்த்து கொண்டால் பெரும பலன் கிடைக்கும். இதனால் நம்முடைய உடலிலுள்ள தேவையற்ற நச்சுகள், கழிவுகள் நீங்கிவிடும்.

உடல்எடை: வெந்தய தண்ணீரை குடித்து வந்தாலும் உடல் எடை குறையும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் வெந்தயத்தையும் போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு ஊறவைத்துவிட வேண்டு. காலையில், அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பகல் முழுவதும் குடித்து வந்தாலே, இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், கொழுப்பு எரிக்கும் செயலும் துரிதமாகும்..
மல்லி விதைகள்: மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது.. அதனால், இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அலர்ஜி, கண் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக இந்த மல்லி விதை உதவுகிறது..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த மல்லி விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் சக்தி, இந்த விதைகளுக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க தூண்டுவதால், உடல் எடையும் குறைய துவங்குகிறது.
சோம்பு தண்ணீர்: பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு தண்ணீரை தவிர்க்கவே கூடாது.. 1 கிளாஸ் தண்ணீரில், சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில், சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி சாறு, தேன் சேர்த்து டீ போல் கலந்து குடித்தாலே போதும்.. உடலில் வாய்வு குறைந்து, செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க செய்கிறது.
ஓம விதைகளும் உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.. நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்டுகள் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம், கொழுப்பு நிறைந்த இந்த விதைகளில், நியாசின், பொட்டாசியம், தியாமின், சோடியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன..
ஓமத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் கொழுப்புச் சத்து குறைந்து, உடல் எடை வேகமாகக் குறைகிறது... அதேபோல, ஓம தண்ணீரையும் குடித்து வரலாம். இதனால் எடை குறைவதுடன், ஆஸ்துமா பிரச்சனையும் தீருகிறதாம்.
பட்டை: அதேபோல, பட்டையை தூள் செய்து டீ போட்டு குடிக்கலாம்.. அல்லது இந்த பட்டையை தண்ணீரில் கலந்து, நாள் முழுவதும் குடிக்கலாம்.. ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது பட்டை துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி,தினமும் வெறும் வயிற்றில், தேன் கலந்து குடித்து வந்தால், கழிவுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.. உடல் எடையும் குறையும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications