சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா? பருப்புக்கீரை நல்லதா? வெறும் இந்த கீரை மட்டுமே போதும்.. சூப்பர்
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு கீரைகள் மிகவும் அவசியம்.. எனினும், ஒருசில கீரைகளை தவறாமல் உணவில் நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
இதில் முதன்மையானது முருங்கைக்கீரையாகும். முருங்கைக்கீரை, சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே உள்ளன.
முருங்கைக்கீரை: ஒரு கைப்பிடி கீரையை சுத்தம் செய்து கழுவி, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கக் கூடாத கீரை முருங்கையாகும்.

அடுத்ததாக, அகத்திக்கீரையை சொல்லலாம். அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து இந்த கீரையில் உள்ளது.. கசப்பு தன்மை உடையதாக இருந்தாலும், அதிக அளவு உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரை இதுவாகும்.. பாகற்காயை போலவே, அகத்திக்கீரையையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கரிசலாங்கண்ணி: அடுத்ததாக, கரிசலாங்கண்ணிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதால், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது.. அவைகளை திறன்பட செயல்பட வைக்கக்கூடியது..

அதேபோல, பருப்புக்கீரை, கண்டங்கத்திரி கீரை, கசப்பு நிறைந்த வெந்தயக்கீரைகளையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.. அதேபோல, இந்த கொடிபசலை கீரையையும், சீரான இடைவெளியில் சாப்பிட்டுவந்தால் பலன் கிடைக்கும்..
இதில், பீட்ரூட் இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். இனிப்பாக இருந்தாலும், இதன் இலைகள் ரத்த சர்க்கரையை குறைக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.. கல்லீரலின் கொழுப்பையும் கரைக்கின்றன. ரத்த ஓட்டம் சீராகிறது. செரிமான கோளாறுகளை நீக்குகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடியது..
சர்க்கரை நோய்: இப்படி கீரைகளை சாப்பிட்டு வந்தால், குடல் சார்ந்த பிரச்சனைகள் தீர்வதுடன், ஈரல், பித்தப்பை, போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளும் சிறக்கும்.. நரம்பு சார்ந்த பிரச்சனைகளையும் தீர்ந்தும்.. எனவே, இந்த கீரைகளை தவிர்க்காமல் உணவாக எடுத்து கொள்ளும்போது, சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.












Click it and Unblock the Notifications