அக்கு அக்கா உதிருதா தலைமுடி.. இந்த 3 மட்டும் போதும்.. தலைமுடி கருகருன்னு வளரும்.. ட்ரை பண்ணி பாருங்க
சென்னை: தலைமுடி வளர்வதற்கு, செயற்கை மருந்துகளைவிட, இயற்கையான முறையிலேயே தீர்வு காணலாம்.. அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த சூப்கள், அல்லது ஜூஸ்கள் தயாரித்து சாப்பிட்டு வருவதால், நல்ல தீர்வு கிடைக்கும். அதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
நம்முடைய உடலில் ஹார்மோன்கள் சீராக இருந்தாலே, தலைமுடியும் ஆரோக்கியமாக காணப்படும்.. அதாவது, இரும்புச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும்..

ஜிங்க் சத்து குறைவாக இருந்தால், தலைமுடி உடைந்த நிலைமையில் அதாவது வலுவாக இல்லாமல் இருக்கும். புரோட்டீன் குறைவாக இருந்தால், தலைமுடியின் செல்களின் வளர்ச்சியை பாதிக்கும்.. வைட்டமின் D குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சியை தடைப்படுத்திவிடும்.
இரும்புச்சத்து: எனவே, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதுபோல உணவுகள் இருக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் C, B, E போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
காரணம், வைட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகமாகிறது.. வைட்டமின் E நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன.
தலைமுடி வளர்ச்சி: அதனால்தான், நம்முடைய தலைமுடிக்கும், நாம் உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. அதேபோல, நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் + நிறைய தண்ணீர் போன்றவையே தலைமுடி வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன.
இதற்கு 3 வகையான ஜூஸ்களை அல்லது சூப்களை செய்து சாப்பிட்டால் ஓரளவு தீர்வு கிடைக்கும். இதில் முதன்மையானது, முருங்கைக்கீரையாகும்.. வழக்கமான கீரைகளைவிட, சற்று அதிகம் இரும்புச்சத்து நிறைந்த கீரையாகும்.
முருங்கைக்கீரை: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..
அடுத்ததாக, நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.. ஜூஸாக இல்லாவிட்டாலும், வெறுமனே நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாம். வைட்டமின் C நிறைந்த இந்த காய்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.. அத்துடன், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.. அதைவிட முக்கியமாக, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
பசலைக்கீரை: அதேபோல, பசலைக்கீரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, கரோட்டினாய்டுகள், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.. இந்த இலையை அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து வடிக்கட்டி குடிக்கலாம்... அல்லது எந்த பழத்தில் ஜூஸ் தயாரித்தாலும், அதில் இந்த பசலைக்கீரையை சேர்த்து அரைத்து குடிக்கலாம். சமையலிலும் இந்த கீரையை பயன்படுத்தலாம்.
எந்த சமையல் செய்தாலும், எந்த வகையான ஜூஸ் செய்தாலும், எந்த வகையான சூப் செய்தாலும், அவைகளிளெல்லாம் கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளலாம். கறிவேப்பிலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும், அதன் பலனோ அபாரம்..!!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications