Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மினுமினுக்கும் குங்குமப்பூ.. பெண்ணின் வரப்பிரசாதம்.. இல்லறத்தை மலரவைக்கும் பூ.. அதிசய குங்குமப் பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதானவர்களுக்கு அருமருந்தாவது இந்த குங்குமப்பூக்கள்.. குறிப்பாக பெண்களுக்கு பயன்படும் அத்தனை மகத்துவமும், மருத்துவமும் இந்த குங்கும பூவில் நிறைந்துள்ளன.

குரோசின், பிக்ரோகுரோசின், சாப்ரனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த குங்குமப்பூக்கள் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய இடத்தை பெற்று வருகிறது.. இந்த பூவை வைத்து ஆராய்ச்சி நடந்துள்ள அளவுக்கு வேறு பூக்களில் நடந்திருக்குமா என்று தெரியுமா? இப்போதுவரை ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளில் பலவித மருத்துவ உண்மைகள் நிரூபணமாகி உள்ளன.

Do you know Excellent Benefits of Saffron and Saffron is the Best medicinal Herbal for Women

மன அழுத்தம்: அந்தவகையில், மன அழுத்தத்தை போக்குவதற்கான குணங்கள் இந்த குங்குமப்பூவில் இருக்கிறதா.. குங்குமப்பூவை 6 வாரங்கள் தந்து, ஆய்வு நடத்தப்பட்டுள்ளதில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டதாம். இந்த பூக்களை மருந்தாக சாப்பிடும்போது, செரடோனின் என்ற பொருள் நம்முடைய உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகிவதாக கூறுகிறார்கள்.

மன அழுத்தம் மட்டுமல்ல, பதட்டம், டென்ஷன், மனம் தளர்ச்சி, ஞாபக மறதி போன்ற நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த குங்குமப்பூ தடுக்கிறதாம்.. அத்துடன், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.

இல்லற வாழ்வு: இல்லற வாழ்வுக்கு இந்த குங்குமப்பூக்கள், பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. இந்த பூக்களை தூள் செய்து, குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை இந்த பூக்கள் தீர்க்கின்றன.. அதிலும் மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், உடல்சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதுடன், முதுமையையும் தள்ளிப்போடக்கூடிய பண்புகள் குங்குமப்பூக்களுக்கு உள்ளது. நரம்பு மண்டலத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளும் இந்த பூக்களில் உள்ளன. புற்றுநோயை தடுப்பதிலும் இந்த பூவின் பங்கு மிக அதிகம்..

உடல் எடை: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பூக்கள் கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.. பசியை தடுக்கின்றன.. அதனால்தான், உடல் எடையை குறைக்கவும் இந்த பூக்களை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான், கருவுற்ற பெண்களுக்கு இந்த பூக்களை பாலில் கலந்து தருவார்கள். இதனால், தாய்க்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதால், ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களும் நீங்குகின்றன.

சைனஸ் இருப்பவர்கள், மற்றும் மூக்கடைப்பு, தலைவலி பிரச்சனை இருந்தால், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால், நிவாரணம் கிடைக்கும். அதேபோல, சருமத்தின் பாதுகாவலனாக இந்த பூக்கள் திகழ்கின்றன..

பருக்கள், தழும்புகள், போன்றவற்றிற்கு இந்த பூக்களை அரைத்து தடவலாம். இதனால் முகமும் பொலிவு பெறும். அதனால்தான், சருமத்துக்கு உபயோகப்படுத்தும், அழகு தயாரிப்புகளிலும், மூலப்பொருட்களாக இந்த குங்குமப்பூக்கள் இன்றும் சேர்க்கப்படுகின்றன.

சரும பாதுகாப்பு: சருமத்துக்கு உபயோகமாக இருப்பதைபோலவே, தலைமுடிக்கும் இந்த பூக்கள் உதவுகின்றன. வெறுமனே குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து குடிப்பதாலே, தலைமுடி வலுவடைவதுடன், முடிஉதிர்வதும் நின்றுவிடும்.

நன்மைகள் பல இருந்தாலும், அதிகமாக இந்த பூக்களை எடுத்து கொண்டால், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உபாதைகள் வரலாம். அதேசமயம் டாக்டர்களின் ஆலோசனைகளை பெறாமல், மருந்தாக யாருமே உட்கொள்ளக்கூடாது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+