அகத்திக்கீரை.. B.P, கொலஸ்ட்ராலை அசால்ட்டா அகற்றும் கீரை.. விஷத்தையே முறித்து காக்கும் அகத்திக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகம் + தீ + கீரை = அகத்திக்கீரை.. அதாவது உடம்பிற்குள் உள்ள சூட்டை தணிக்கக்கூடியதால்தான், இதற்கு அகத்திக்கீரை என்றே பெயர் வந்தது.. ஒருபொருள் மலிவாக கிடைத்தாலே, அதற்கு பெரிதாக மனிதர்கள் மதிப்பு தருவதில்லை.. அப்படிப்பட்டதுதான் இந்த அகத்திக்கீரை.
அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் நிறைந்த கீரை இது.. எல்லா காலத்திலும் வற்றாமல் கிடைக்கக்கூடியது.. விலையோ குறைவானது.

10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இந்த 2 பொருட்களின் விலையைவிட, இந்த கீரை குறைவு. பிரசவித்த தாய்மார்களுக்கு, உடம்பில் சூடு சேர்ந்துவிடும்.. அதேபோல, கால்சியம், இரும்புச்சத்துக்களும் குறைந்துவிடும். அதனால்தான், இந்த அகத்திக்கீரையை குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் சமைத்து தருவார்கள்.

Do you know Excellent Health Benefits of Agathi Keerai and what are the Super Uses of Agathi Keerai

எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதித்தன்மையை தரக்கூடியது.. தாய்ப்பால் பெருகும்.. அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாக தரப்படுகிறது..

உயிர்ச்சத்துக்கள்: மற்ற கீரைகளை போல, இந்த கீரையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட முடியாது.. காரணம், 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் இதில் அடங்கி உள்ளன.. ஜஸ்ட் 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் இருக்கிறதாம்..

2 வகையான அகத்திக்கீரை உள்ளது.. ஒன்று வெள்ளை நிற பூக்களையும், இன்னொன்று சிவப்பு நிற பூக்களையும் கொண்டது.. பெரும்பாலும் வெள்ளைநிற பூக்களை கொண்ட கீரையைதான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.. கிட்டத்தட்ட இதுவும் முருங்கை மரம் போலத்தான்.. இந்த மரத்தின் எல்லா பகுதிகளுமே மருத்துவ மூலிகைத்தன்மை கொண்டது.

ரத்தசோகை : ரத்தசோகை உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த கீரையை வாரத்தில் ஒரு முறை சமைத்து சாப்பிட வேண்டும்.. காரணம், அகத்திக்கீரை மருந்து முறிவு கீரை என்பதால், பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் மட்டும் இதை சாப்பிடக்கூடாது. அதேபோல, மற்ற கீரைகளை போல தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாது..

அதேசமயம், வாரம் ஒருமுறை பயன்படுத்தும்போது, நல்ல மூளை வளர்ச்சியை தரக்கூடியது.. உடல் பலத்தையும் தரக்கூடியது. குடல்புண்களை ஆற்றக்கூடியது.. சருமத்துக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடும்.. ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை தவறவிடக்கூடாது.

எப்படி சமைப்பது: அகத்திக்கீரை கசப்புத்தன்மை இருக்கும் என்பதாலேயே ஒதுக்கிவிடுகிறோம். அதேபோல, முற்றின கீரையை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.. இளங்கீரையை மட்டுமே எடுத்து, தேங்காய்ப்பால் ஊற்றி சமைக்கும்போது, இந்த கசப்பு நீங்கிவிடும்.

அதேபோல, இந்த கீரையில் வாயுத்தன்மை இருப்பதால், சிறிது பெருங்காயம் சேர்த்து சமைத்தால், உடம்பிலுள்ள வாயுவும் நீங்கிவிடும். மதிய நேரத்தில் மட்டுமே இந்த கீரையை சாப்பிட வேண்டும். அதேபோல, இந்த கீரையை சூப் வைத்தும் குடிக்கலாம்..

தோலில் அரிப்பு, தோல் நோய்கள் சிரங்கு, தொண்டைப்புண், தொண்டைவலியை நிவர்த்தி செய்யக்கூடியது. குறிப்பாக, உடம்பில் எந்த காயங்கள் இருந்தாலும் சரி, இந்த கீரையை வேக வைத்து, பேஸ்ட்போல அரைத்து காயங்களின் மீது கட்டிவந்தால், விரைவில் காயங்கள் ஆறிவிடும்..

தேங்காய் எண்ணெய்: இந்த கீரையை, தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து வதக்கி, பேஸ்ட் போல அரைத்து பூசினால், உடம்பிலுள்ள தேமல்கள் மறையும்.. இந்த சாற்றினை, சேற்று புண்களில் தடவி வந்தால், சேற்று புண்கள் ஆறிவிடும். இந்த சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சலும் அகலும்.. இந்த சாற்றை நெற்றியில் தடவினால், தலைவலி, ஜலதோஷமும் நீங்கும். இந்த சாற்றினை வெறும் வயிற்றில், ஒரு மாத காலத்திற்கு, ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு மாறும்.

இந்த கீரையின் பூக்கள், கண்களுக்கு மிகவும் நல்லது.. கண்நோய்கள் இருந்தால், இந்த பூவின் சாற்றை பயன்படுத்தினால் போதும்.. இதன் பூக்களை கஷாயம் போல பயன்படுத்தலாம்., இந்த பூவை சமைத்து சாப்பிட்டாலும் மலச்சிக்கல் தீரும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+