முருங்கைக்கீரை சாறு.. முருங்கையின் தண்ணீர் குடித்தாலே போதும்.. நோய்கள் நாலடி தள்ளி நிற்கும் பாருங்க
சென்னை: உணவில் எந்த ரூபத்தில் முருங்கைக்கீரையை பயன்படுத்தினாலும், அது கோடி பலன்களை தரக்கூடியது.. அந்தவகையில் முருங்கைக்கீரை சாறு தரும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
முருங்கைக் கீரையில் வைட்டமின் A,B,C, சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட கணக்கிலடங்காத சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.

முருங்கைக்கீரை: முருங்கைக்கீரையில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த தண்ணீரை குடித்தாலே போதும்.. இந்த முருங்கை சாறில், எலுமிச்சம் பழ சாறு கலந்து குடித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.. இவைகளுடன் சிறிது நெல்லிக்காய் சாறையும் கலந்து குடித்தால், பல நோய்கள் நம்மை அண்டவே அண்டாது.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளை முருங்கையின் சாறு நீக்குகிறது.. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.. ரத்த சோகையை விரட்டியடிக்கிறது.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், எலும்புகளையும் பலப்படுத்துகிறது இந்த முருங்கை சாறு.. தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்...
முருங்கையிலை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால், வாரம் 2 முறையாவது, முருங்கை சூப் அல்லது முருங்கை ஜூஸ் தயாரித்து குடிக்க சொல்கிறார்கள்.. அதிலும் வெறும் வயிற்றில் இந்த முருங்கையிலை சாறு குடித்து வந்தால், கெட்ட கொழுப்புகள் கரைகின்றன.. குடல் சுத்தமாகிறது.. உடல் எடையை குறைய தூண்டுகோலாகின்றன. செரிமான பிரச்சனையும் நீங்குகிறது.
உடலின் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த தண்ணீராக இது உள்ளது. இந்த முருங்கை தண்ணீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடுவதுடன், தலைமுடிக்கு பலம் கிடைக்கிறது..
வாய்ப்புண்ணும், வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது.. முருங்கை கீரை சாறு, குடித்து வந்தால் உடல் சூடு தணியும்... வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், போன்ற பிரச்சனைகளும் அகலும்...
இலைச்சாறு: முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகளை இந்த முருங்கை தண்ணீர் போக்குகிறது.. முகப்பருக்கள், தழும்புகள் இருந்தால், இந்த முருங்கை சாறுடன், எலுமிச்சம் சாறு கலந்து பூசிவந்தாலே, பருக்கள் மறைய துவங்கும்.
அவ்வளவு ஏன், வெறும் முருங்கை சாறு குடித்து வருபவர்களுக்கு தோல் நோய்களே வருவது கிடையாது. ஆஸ்துமா போன்ற நோய்களையும் அண்ட விடுவதில்லை இந்த முருங்கை சாறு.
இந்த முருங்கைக்கீரையில் சாறில், தேன் சேர்த்து, 1 டம்ளர் இளநீருடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.. குழந்தைகளுக்கு இரும்புச்சத்து தேவையானால், இந்த முருங்கையிலை சாற்றீனை தாராளமாக கொடுக்கலாம்.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு இருந்தால், சிறிது முருங்கை இலை சாற்றில், கேரட் ஜுஸ் கலந்து குடிக்கலாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications