மஞ்சள் மஞ்சள் மகிமை.. சரும கருமையை நீக்கி, பளபள பொலிவை தரும் கஸ்தூரி மஞ்சள்.. செம டிப்ஸ் நோட்பண்ணுங்க
சென்னை: சருமத்துக்கு அத்தியாவசியமான பொருட்களில், முதன்மையான இடம் இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு.. சரும பளபளப்பு மட்டுமல்லாமல், சருமத்துக்கே பாதுகாப்பு தரக்கூடியது இந்த கஸ்தூரி மஞ்சள்.
கஸ்தூரி மஞ்சள் என்பது குர்குமா இனத்தை சேர்ந்ததாகும்... கமகமக்கும் காட்டு இஞ்சி.. மற்ற மஞ்சளைவிட, இந்த கஸ்தூரி மஞ்சளில்கூடுதல் வண்ணமும், மணமும் கிடைக்கும்.

சரும பாதுகாப்பு: உடலில் அடிபட்டுவிட்டால் காயங்களுக்கும், கட்டிகளுக்கும், சருமத்தில் தோன்றும் தேமலுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், இந்த மஞ்சள் பயன்படுகிறது. அதனால்தான், வாசனை பவுடர்களிலும், குளிக்க பயன்படுத்தும் தைலங்களிலும், மூலப்பொருட்களாக இந்த மஞ்சளை சேர்க்கிறார்கள்.
வழக்கமாக, மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை நிறைய உண்டு.. எனவே, சருமத்துக்கு அத்தனையும் பாதுகாப்பை தருகிறது.. முகத்திலுள்ள பருக்களையும், கருமையையும் நீங்குகின்றன.. அதுமட்டுமல்ல, முகத்தில் வளர்ந்திருக்கும் குட்டி குட்டி முடிகளையும், இந்த மஞ்சள் நீக்கிவிடும்.. முகம் மட்டுமல்லாமல் கை கால் போன்ற இடங்களில் தேவையற்ற முடிகள் இருந்தால், இந்த மஞ்சளை தாராளமாக அரைத்து பூசலாம்.. வயதான தோற்றத்தை தள்ளிப்போட்டு, இளமையை தக்கவைக்கிறது.. தோல்களில் தேமலும் வராது..
வெண்மையான சருமம்: சூரியஒளியால் ஏற்படும் சேதத்தையும் கட்டுப்படுத்துகிறது.. சருமம் வெண்மையாக வேண்டுமானால், அதற்கும் இந்த மஞ்சள்தான் பயன்படுகிறது.. இறந்த செல்களை எதிர்த்து போராடி, சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் சக்தி இந்த மஞ்சளுக்கு உண்டு. அதேபோல, எண்ணெய் சுரப்பிகளால், ஏற்படும் கட்டிகள், கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.
அதனால், சிறிது மஞ்சளை எடுத்து, ரோஸ்வாட்டருடன் கலந்து தேய்த்து வந்தாலே, முகத்தில் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். அல்லது கொண்டைக்கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், பால் கலந்தும் முகத்தில் பேக் போல பயன்படுத்தலாம். ஆரோக்கியமான சருமம் இருந்தால்தான், நம்மால் எளிதாக சுவாசிக்க முடியும்..
புற்றுநோய்: ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த இந்த கஸ்தூரி மஞ்சள், புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது. குர்க்குமால், குர்டியோன் என்னும் ரசாயனப் பொருள்கள் புற்று நோய்ச் செல்கள் உருவாவதை வெகுவாக தடுக்கிறது.
கஸ்தூரி மஞ்சளை இடித்து தூள் செய்து, 500மி.கி வீதம் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், வயிறு கோளாறுகள் தீர்வதுடன், பெண்களின் வெள்ளைப் போக்கு மற்றும் அதிக மாதவிடாய் போக்கும் குறையும். அதேபோல, 2 ஸ்பூன் தயிரில் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவந்தால் அல்சர் குணமாகும்.
வீக்கம் வலிகள்: இந்த மஞ்சளை வெங்காய சாறுடன் கலந்து கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடைந்துவிடும். அல்லது மஞ்சளை, நெருப்பில் வாட்டி, காயம்பட்ட இடத்தில் கட்டிவைத்தால், வீக்கமும் வலியும் குறைந்துவிடும். அதேபோல, கஸ்தூரி மஞ்சளை நெருப்பில் சுட்டு வரும் புகையை நுகர்ந்தால், மூக்கு ஒழுக்கு, மூக்கு நமைச்சல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
கஸ்தூரி மஞ்சளுடன், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை சேர்த்தும் முகத்துக்கு தடவி வரலாம்.. கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, சருமம் மென்மையாகும்.. பக்கவிளைவு எதுவும் இல்லாமலேயே பாதுகாப்பாக இருக்கும்.. ஒவ்வாமை பிரச்சனை இருந்தாலும் தீர்ந்துவிடும்.
கஸ்தூரி மஞ்சளுடன், காய்ச்சாத பால் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து, அதை இரவு தூங்கும்முன்பு, பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில், மீண்டும் சிறிது பால் விட்டு, கலந்து, முகத்திலும், கை,க ழுத்து என முடி வளரும் இடங்களிலும் தடவி 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சிறிது தண்ணீர் தெளித்தபடியே, விரல்களால் ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். ஒருவேளை குளிர்ந்த பால் இல்லாவிட்டால், தயிர் சேர்த்து கொள்ளலாம்.
பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றுடனும் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து குழைத்து முகத்தில், கை, கால்களில் பூசி வரலாம்.. அல்லது முல்தானிமிட்டி, அல்லது கடலை மாவுடன் அல்லது தேனுடன், கஸ்தூரி மஞ்சளை கலந்து பூசி வரலாம். இதனலால், சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சரும பாதுகாப்பும் கிடைக்கும்.. சருமம் சீராக சுவாசிக்கவும் எளிதாக இருக்கும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications