Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்னியில் தொற்று இருக்கா? இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.. சிறுநீரக தொற்று ஒரேடியாக ஓடிருமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரகங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான உறுப்பாகும்.. இதில் தொற்று ஏற்பட்டுவிட்டால் மிகவும் சிக்கலாகிவிடும். இந்த தொற்றுக்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எளிதாக வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திவிடலாம்.

பொதுவாக சிறுநீரகங்கள் என்றாலே, கற்கள் தோன்றிவிடும்.. உயிரையே கொல்லும் அளவுக்கு வலியும் எடுத்துவிடும்.. இந்த கற்களை எளிய முறையில், உணவு முறையிலேயே குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள்.

Do you know How to Cure Kidney Infections and What foods can be eaten to avoid kidney Infections

இதற்கு முதலில் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.. பார்லியை நன்றாக வேகவைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறும்.. துளசியில் ஜூஸ் செய்து, அதில தேன் கலந்து குடிக்கலாம்.. தக்காளி ஜூஸ் செய்து, மிளகுதூள் சேர்த்து குடித்து வரலாம்..

திராட்சை: நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.. இதில் முதன்மையானது வெள்ளரிக்காய்கள்.. அதேபோல, பழங்களில் மாதுளம், திராட்சை பழங்களை ஜூஸ் போல அல்லாமல், விதைகளுடன் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். பரங்கிக்காய், சுரைக்காய், என நீர்நிறைந்த காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

இதில் முக்கியமானது, வாழைத்தண்டு.. இந்த வாழைத்தண்டினை பொரியல் அல்லது ஜூஸ் போல செய்து சாப்பிடலாம்.. முள்ளங்கியை ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. கீரைகளில், அகத்திக்கீரையும், புதினாவும், துளசியும் சிறுநீரக கற்களை கரைக்க பெரிதும் துணைபுரிகின்றன.. துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று விழுங்கலாம். அதேபோல, ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குடித்தால், சிறுநீரக கற்கள் கரைய நிவாரணம் கிடைக்கும்.

வீட்டு வைத்தியம்: இதெல்லாம் ஆரம்பக்கட்ட வீட்டு வைத்தியம் மட்டுமே... ஆனால், கல்லின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படுமே தவிர, இதுவே தீர்வுகிடையாது. கற்களின் அளவு பெரிதானால், டாக்டரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.

அதேபோல சிறுநீர் தொற்று பிரச்சனையிலிருந்து விடுபடவும், எளிமையான வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம்.. இதற்கு முதலில் உதவுவது தண்ணீர்தான்.. அதிக தண்ணீர் குடித்து கொண்டேயிருக்க வேண்டும்.. நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்வதுடன், இதுபோன்ற தொற்று வராமல் தடுக்கும்.. அதிக தண்ணீர் குடித்து வந்தால், அதிகமான சிறுநீர் வேகமாக வெளியேறும்போது அதில் பாக்டீரியாக்களும் கலந்து வெளியேறிவவிடும்.

இளநீர்: அடுத்ததாக இளநீர் குடிக்க வேண்டும்.. உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதுடன், சிறுநீர் தொற்றிலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.. பூண்டு அதிகம் சாப்பிட வேண்டும்.. ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரஸ் பண்புகள் உள்ளதால், பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கிறது.. அதுமட்டுமல்ல, பூண்டில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்கு மூலக்காரணமான ஈகோலி என்ற பாக்டீரியாவை அழித்து ஓட்டுகிறது.

அடுத்ததாக சுத்தமான தயிரை உணவில் சேர்த்து கொள்ளலாம். காரணம், தொற்றிலிருந்து நம் முழு உடலையும் பாதுகாக்க கூடிய நற்பண்புகள் இந்த தயிரில் அடங்கியிருக்கின்றன.. அதேபோல மோரிலும் அடங்கியிருக்கின்றன.. தொற்றை நீக்குவதுடன், சிறுநீர் எரிச்சலும் தணியும்..

ஏலக்காய் பொடி: ஏலக்காய்களை உணவில் அதிகம் பயன்படுத்தலாம்.. இதற்கு நான்கைந்து ஏலக்காய் விதைகளை விழுதாக அரைத்து, சிறிது சுக்கு பொடியுடன் கலந்து வைத்து கொள்ள வேண்டும். மாதுளை பழ சாறு எடுத்து, அதில் பொடியையும், கல் உப்பையும் சேர்த்து வெந்நீருடன் குடித்து வரும்போது, தொற்றுகள் அகலும்.. ஒரு டப்ளர் சுடுநீரில், 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடித்தாலும், தொற்று குறையலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+