முருங்கை ஈர்க்கு.. வெறும் வயிற்றில் இந்த 3 பொருளும் போதுமே.. ஆயுசு கூடுமாம்..அசத்தும் எலுமிச்சை தோல்
சென்னை: வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவுகள் அல்லது பானங்கள்தான் அன்றைய நாளை, சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. அந்தவகையில் 3 முக்கிய உணவுகளை பார்ப்போம்.
எலுமிச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிட்டு சொல்ல முடியாது.. உடலிலுள்ள நச்சுக்களை, கழிவுகளை, அகற்றி ஏகப்பட்ட நன்மைகளை இந்த எலுமிச்சம் பழம் தருகிறது. அதனால்தான், வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழ சாறை, வெந்நீரில் கலந்து குடிக்க சொல்கிறார்கள்.

எலுமிச்சம் தோல்: ஆனால், எலுமிச்சை பழத்தை போலவே, அதன் தோலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் இடம்பெற்றுள்ளன. அதனால், எலுமிச்சை தோலை தூக்கி தூர போடாமல், பயன்படுத்தினால், நிறைய பலன்கள் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் இந்த எலுமிச்சம் தோலை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடல் எடையில் மாற்றம் தென்படும். சருமம் பளபளக்கும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அதேபோல, பூண்டு பால் குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் உரித்த பூண்டுக்களை தட்டி சேர்த்து, பாலை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மஞ்சள் தூள், மிளகுதூள், தேன் அல்லது பனங்கற்கண்டு, சேர்த்து தினமும் குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பூண்டு பால்: குறிப்பாக, சுவாச கோளாறுகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் காக்கப்படும். வயிற்றிலுள்ள புழுக்கள் அழியும்.. செரிமானம் சீராகும்.. உடல் எடையும் குறையும்.. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளும் கரையும்.. இதயம் சிறப்பாக செயல்படும்.. பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனையும் குணமாகும். கிருமிகள் நம்மை அண்டாது. இந்த பூண்டு பாலை, முகத்துக்கும் தடவிவந்தால், முகப்பரு பிரச்சனைகள் தவிர்க்கப்படும்..
அடுத்ததாக, முருங்கைக்கீரை ஈர்க்கை பயன்படுத்தலாம்.. அதாவது, முருங்கைக்கீரையை சுத்தம் செய்யும்போது, அதிலுள்ள இளம்குச்சிகளைதான் ஈர்க்குச்சி அல்லது ஈர்க்கு என்பார்கள்.. இந்த குச்சிகளிலும், நிறைய சத்துக்கள் உள்ளன.. குறிப்பாக கால்சியம் அதிகம் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது..

முருங்கை ஈர்க்கு: 40, 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனையின்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இப்படி பல உபாதைகள் ஏற்படும்.. அவர்கள் இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.
இந்த குச்சிகளை வைத்து ரசம் செய்யலாம். கசாயம் போல செய்து குடிக்கலாம். வெறும் குச்சிகளை கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறுவதுடன், ஈறுகளில் உள்ள தொற்றுக்களும் நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications