காசினி கீரையை இப்படி சாப்பிட்டு பாருங்க! சர்க்கரை சர்னு இறங்கும்! உதிரப்போக்கு படார்னு குறையும்!
சென்னை: போண்டா கீரை என அழைக்கப்படும் காசினி கீரையின் நலன்கள் என்னென்ன தெரியுமா? மருத்துவமனைகளுக்கே செல்லும் வாய்ப்பை குறைக்கிறது இந்த காசினி கீரை!
கீரையை வாரத்தில் 3 நாட்களாவது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் முடிந்தால் தினந்தோறும் கூட கீரைகளை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் கீரையுடன் தயிரை சாப்பிடுவது நல்லதல்ல என்பது வேறு சாப்டர்.

இப்படி வாராவாரம் கீரைகளை சாப்பிட்டு கொண்டே இருந்தால் அதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பொதுவாக கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இதனால் உடல் எடை குறையும்.
அந்த வகையில் காசினி கீரை குறித்து பார்ப்போம். இதை பொடி பொடியாக கட் செய்து போண்டா மாவில் கலந்து போண்டா போடுவார்கள். இது சுவையாக இருக்கும். இந்த கீரையை நன்கு சுத்தப்படுத்தி காய வைத்து பொடியாக்கி பயன்படுத்த வேண்டும். இது ஆண்மைக் குறைபாட்டுக்கு மருந்தாக பயன்படுகிறது. காசினி கீரை பொடி கூட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
இந்த பொடியை அரை ஸ்பூன் காய வைத்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். இது போல் துர்நாற்றத்துடன் வெள்ளை போவதும் சரியாகிவடும். இந்த காசினி கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் உதவுகிறது.
தினமும் காலையில் பாகற்காய் சாறு, கறிவேப்பிலை சாறு வெந்தயம் போன்றவைகளுடன் காசினி கீரை பொடியையும் சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். அது போல் காசினி கீரை பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த கீரையை பருப்புடன் சமைக்கலாம்.
இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். அது போல் சீழ் வடிந்து கிடக்கும் புண்களையும் இந்த காசினி கீரை ஆறவைக்கும். புண் இருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டால் அதிக உதிரப்போக்கை குறைக்க கூடும். எடையை குறைக்க உதவும். இதை சூப்பாக குடித்தாலும் பலன் கிடைக்கும்.
காணாம் கோழிக் கீரை தான் மருவி காசினி கீரையானது. காபி பொடியில் கலக்கும் சிக்கரி இந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது. இது ஜீரண கோளாற்றை சரி செய்யும். இதய நோயை விரட்டும். உடலில் எந்த பாகத்தில் வீக்கம் இருந்தாலும் அது நீக்கும். பற்களை சுத்தப்படுத்தும். உடலில் தேவையான நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.












Click it and Unblock the Notifications