கிச்சிலிக்கிழங்கு.. புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை விரட்டும் கிச்சிலி கிழங்கு.. சூப்பரான கிச்சிலி தூள்
சென்னை: உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சரும பாதுகாப்புக்கும் சேர்த்து நன்மை தரக்வடியதுதான் கிச்சிலி கிழங்கு.. வெறும் கிழங்குதான், ஆனால், புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது இந்த மூலிகை.
கிச்சிலி கிழங்கை, பெரும்பாலும் பூலாங்கிழங்கு என்பார்கள்.. வெள்ளை மஞ்சள் என்றும் சொல்வார்கள்.. வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று நினைத்து ஒதுக்கிவிட்டதால்தான், இதன் அற்புத மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

ஊறுகாய்: வடமாநிலங்களில் இதில் ஊறுகாய் போடுவார்களாம்.. சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துவார்களாம்.. ஆனால், நாம் இந்த கிழங்கை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி பலனை பெறுகிறோம்.
இஞ்சி போலவே கெட்டியாக, ஆரஞ்சு கலரில் இந்த கிழங்கு காணப்படும்.. மாம்பழம் போலவே வாசனையா இருக்கும்.. கசப்பாகவும் இருக்கும். முன்பெல்லாம், இந்த கிச்சிலி கிழங்கை பயன்படுத்திதான், குழந்தைகளை குளிக்க வைப்பார்களாம். இப்போதுகூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
புற்றுநோய்: குர்குமின் என்ற பொருள்தான், இந்த கிச்சிலி கிழங்கின் மகத்துவத்தை உயர்த்துகிறது.. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இந்த குர்குமினில் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பேருதவி புரிகிறது.
அதிலும், பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல், இந்த கிச்சிலி கிழங்கின் சாறு மருந்தாக காக்கிறதாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிச்சிலி கிழங்கை, டீ போல தயாரித்து குடிக்கலாம், சூப் மாதிரியும் வைத்து குடிக்கலாம். இதனால், மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
கிச்சிலி கிழங்கு தூள்: இந்த கிச்சிலி கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து கொள்ள வேண்டும். நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வை இந்த கிச்சிலி கிழங்கு பொடி தந்துவிடுகிறது. அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் வந்தாலும் சரி, இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டாலே போதும்.. அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே இருமல், சளி கட்டுப்படும்.. காய்ச்சல் ஓடிவிடும்.. இதே பொடியில் சிறிது தண்ணீரை குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் மீது தடவினால், அத்தனையும் பறந்துவிடும்.
வேர்ப்பகுதி: முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும், தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தருவதற்கும் இந்த கிழங்குதான் பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள்தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
வெயில் காலங்களில் வேர்க்குரு, நமைச்சர், அரிப்பு, வியர்வை நாற்றம் போன்றவை இருந்தாலும், இந்த கிழங்கை பவுடர் போல பயன்படுத்தி தீர்வு காணலாம்.. அந்த அளவுக்கு மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications