ஜஸ்ட் 3 இலையே போதும்.. நாவல் பழத்தைவிட பெஸ்ட்.. பெண்களின் வரப்பிரசாதம்.. நாவல் இலைகள் சூப்பர் மேஜிக்
சென்னை: நாவல் பழம் எந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே எண்ணற்ற பலன்களை தரக்கூடியது நாவல் மரத்தின் இலைகள்.
சர்க்கரை நோய் என்றாலே அதற்கு சிறந்த மருந்தாக கூடிய நாவல்பழத்தை மறக்க முடியாது.. நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, தயாமின், ரிபோஃப்லோவின், நியா சின், வைட்டமின் A, C, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு, நீர்ச்சத்து போன்ற நிறைந்துள்ளன.

நாவல் பழம்: நாவல் பழத்தை போலவே, அதன் இலைகளிலும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. அதைவிட முக்கியிமாக, நுண்கிருமிகளை போக்கக்கூடிய சக்தி, இந்த நாவல் இலைகளுக்கு உள்ளனவாம்.
அபரிமிதமான சக்தியை கொண்ட இந்த நாவல் இலைகள், இருமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு நிவாரணத்தை தருகின்றன...
இலைக்கொழுந்து: வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை சுத்தமாக கழுவி, அதை இடித்து சாறு எடுத்து, 3 நாட்கள் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும். அல்லது நாவல் மரத்தின் இலைக்கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்...
அதேபோல, இந்த இலைகளை கஷாயம் வைத்தும் சாப்பிடலாம். அல்லது, நாவல் இலைக்கொழுந்துகளுடன், மாவிலைக் கொழுந்தையும் சம அளவு சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத தயிரில் கலந்து குடித்தால், சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவை உடனடியாக கட்டுப்படும்.
தீக்காயங்கள்: நாவல் இலைகளை பொடி செய்து, அதில் பற்களை தேய்த்து வந்தால், ஈறுகள் வலுவடையும்.. அதேபோல, குளிர்ச்சி நிறைந்த இந்த இலையை நெருப்பில் எரித்து, அதன் சாம்பலை, தீக்காயங்கள், வெட்டுக்காயங்களுக்கு பூசினால், தீப்புண்கள் விரைந்து ஆறிவிடும்.
நாவல் இலைகளை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, கருவண்டுகள் போன்ற பூச்சிகள் அண்டாது. அதனால்தான் கைக்குழந்தைகள் இருக்குமிடத்தில், பூச்சிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறிது நாவல் இலைகளையும் ஆங்காங்கே தூவி வைப்பார்கள்.
பெண்களின் மலட்டுத்தன்மை குணமாக்குவதற்கு, வைட்டமின் E அவசியம் தேவைப்படுகிறது.. அது இந்த இலைகளில் நிறையவே நிறைந்திருக்கின்றன.

மூலிகை: நாவல் மரத்தின் இலையில் சாறு எடுத்து, அதை கஷாயமாக்கி தேன் அல்லது வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்குமாம்.. அல்லது 3 நாவல் இலைகளை விழுதாய் அரைத்து, கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டுவந்தாலும், குழந்தைப் பேறு உண்டாகும் என்கிறார்கள்.
ஆனால், வெறும் இலைகளே என்றாலும், மூலிகை சக்தி நிறைந்தது என்பால், டாக்டர்களின் முறையான ஆலோசனையுடன் இவைகளை மருந்தாக உட்கொள்வது சிறந்ததாகும்.












Click it and Unblock the Notifications