ஏழைகளின் ஆப்பிள்.. ஔவை பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி! எப்படி சாப்பிடக் கூடாது தெரியுமா?
சென்னை: பல்வேறு சத்துகள் அடங்கியுள்ள நெல்லிக்காயை எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுவது நெல்லிக்காய். An Apple in a day keeps the doctor away என ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கேற்ப தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் உபாதையே ஏற்படாது, மருத்துவரிடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் இதன் பொருள்.

ஆனால் ஆப்பிளை ஏழை எளிய மக்களால் வாங்க இயலாது. அப்படியே வாங்கினாலும் தினமும் வாங்கி உண்ண முடியுமா என்பது சந்தேகமே. ஆப்பிளில் இருக்கும் அதே சத்துகளுடன் குறைந்த விலையில் ஒரு பழம் கிடைத்தால் தினமும் உண்ண கசக்குமா என்ன?
அப்படி ஒரு பழம்தான் நெல்லிக்காய், ஔவைக்கு அதியமான் அளித்த காய்! இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் உள்ளிட்டவை உள்ளன. இந்த நெல்லிக்காயை இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி அளவுக்கு வைட்டமின் சி உள்ளது.
எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதை தினமும் சாப்பிட்டால் போதும் வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் ஒன்றும் நெருங்கவே நெருங்காது. இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தலைமுடிக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த தீர்வு. முடியை செழிப்பாக வளர வைக்கும், முடி வளர்ச்சிக்கான எண்ணெய் தயாரிப்பு, ஷாம்பு தயாரிப்பிலும் நெல்லிக்காய் முக்கிய இடம் பிடிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால் போதும் இன்சுலின் உற்பத்தியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும் அருமருந்து.
நெல்லியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலம் எளிதாக வெளியேறும். கண்களுக்கு நன்மை தரும். நெல்லியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இதனால் இது கண்களை இமை போல் பாதுகாக்கும். கண் எரிச்சல், கண்கள் சிவந்து போதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இதயத்திற்கு நல்லது. உடலில் சேர கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும். ரத்த நாளங்கள், தமனிகளை சுத்தமாக வைத்திருக்கும். கல்லீரலில் உள்ள நச்சுகளை அகற்றி கல்லீரல் பாதிப்பை தடுக்கும். ஆஸ்துமாவுக்கு சிறந்த தீர்வு. நெல்லிச் சாற்றில் சிறிது தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும். அல்சரை குணப்படுத்தும் அற்புதக் காய் நெல்லிக்காய்.
நெல்லியில் ஆன்டிஆக்ஸிடென்ட் இருப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும். உடல் எடை குறைய இந்த நெல்லிக்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். நெல்லிக்காயை பச்சையாகவே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இந்த நெல்லிக்காயை தவிர்ப்பது நல்லது. கால்சியம் ஆக்ஸைடு அதிகம் நெல்லியில் உள்ளதால் தவிர்ப்பது நல்லது. குறைந்த அளவு ரத்தத்தில் சர்க்கரை உள்ளவர்கள் (low sugar) உள்ளவர்கள் தவிர்க்கலாம். நெல்லிக்காயை ஜூஸ் போட்டு சாப்பிடலாம். ஆனால் ஊறுகாய் செய்து சாப்பிடவே கூடாது. இதன் மருத்துவ நன்மைகள் நமக்கு கிடைக்காது.
இந்த காயை ஔவைக்கு அதியமான் அளித்தது ஏன் தெரியுமா. இந்த காய் நீண்ட ஆயுளைத் தரவல்லது, இதை தான் உண்பதை விட நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என எண்ணும் ஔவையார் உண்டால் நல்லது என நினைத்தே அவருக்கு நெல்லிக்காயை அதியமான் அளித்தார்.












Click it and Unblock the Notifications